மொபைலை 30 சதவீதம் வேகமாக சார்ஜ் செய்ய வேண்டுமா
ராசு (Author) Published Date : May 10, 2018 18:14 ISTTechnology News
வயர்லெஸ் சார்ஜிங் முறையானது அதிக விலையுள்ள ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர்கள் மத்தியில் தற்போது பரவலாக விரும்பப்படுகிறது. மொபைலை சார்ஜிங் செய்யக் கூட நேரம் இல்லாதவர்கள், தூங்கச் செல்லும் முன் சார்ஜிங் செய்வது வழக்கம். ஆனால், மீண்டும் நடு இரவில் எழுந்து, மொபைலை சார்ஜிங்கிலிருந்து விடுவிக்க வேண்டும், இல்லை என்றால், பேட்டரி அதிக சூடாகிவிடும். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக, சந்தையில் நிறைய வயர்லெஸ் சார்ஜிங் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில், அமேசான் இணையத்தளத்தில், ANKER என்ற நிறுவனத்தின் வயர்லெஸ் சார்ஜிங் கருவி 30 சதவீத தள்ளுபடியுடன் காணப்படுகிறது. இதைப் பற்றி ஆராய்ந்த போது, நமக்கு பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றன. WaveBoost தொழில்நுட்பத்தில் தயாரான இந்தக் கருவியின் மூலம் 30 சதவீதம் வேகமாக சார்ஜிங் செய்ய இயலும். தட்டு போன்ற வடிவில் உள்ள மேற்பரப்பில் மொபைலை வைத்தால் போதுமானது. மேலும், சார்ஜிங் முடிந்த பின் பேட்டரி சூடாகாமல் தடுக்க, உள்ளடங்கிய குளிர்ச்சி அமைப்பு வசதி உள்ளது. "ANKER254" என்ற குறியீட்டைப் பயன்படுத்தி அமேசானில் 30 சதவீத தள்ளுபடியுடன் தற்போது இந்தக் கருவியை வாங்க இயலும்.
நிறையாக பல ஆதாயங்கள் சொல்லப்பட்டாலும், குறையாக சில விஷயங்களும் அடங்கியுள்ளன. இந்தக் கருவி, உயர் ரக ஸ்மார்ட் போன்களான ஐபோன் X, 8, 8 பிளஸ், மற்றும் சாம்சங் காளக்ஸி S9 / S9+ / S8 / S8+ / S7 /நோட் 8 ஆகியவைகளை மட்டுமே சார்ஜிங் செய்ய இயலும்.