குரூப் அட்மினுக்கு வாட்சப்பின் புதிய அப்டேட்
வேலுசாமி (Author) Published Date : Jun 21, 2018 15:03 ISTTechnology News
தற்போது பிரபலமாகி வரும் வாட்சப், தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது குரலை அதிக நேரம் பதிவு செய்து பகிரலாம். முன்னதாக வாட்சப்பில் குரலை பதிவு செய்து பகிர மைக்ரோபோன் பட்டனை அதிக நேரம் அழுத்தி குறிப்பிட்ட நேரம் வரை தங்களது குரலை பதிவு செய்து பகிர முடியும்.
ஆனால் இந்த அபிடேப் மூலம் வாட்சப்பில் மெசேஜ் டைப் செய்யும் பாக்சிற்கு அட்டச்மெண்ட் (Attachment), கேமிராவிற்கு (Camera) அருகில் இருக்கும் மைக்ரோபோனை ஸ்லைட் (Slide) செய்தலே போதும். மைக்ரோபோனை ஸ்லைட் செய்து அதிக நேரம் பதிவு செய்து பகிரலாம். பதிவு செய்யும் போதே அதனை கேன்சல் செய்து டெலிட் செய்யலாம். இது தவிர இந்த அப்டேட்டில் ஒரு குரூப்பில் அட்மினாக இருப்பவர்கள், மற்ற அட்மினின் உரிமையை (Admin Rights) ரத்து செய்யலாம்.
இதற்கு 'Group Info' என்ற ஆப்ஷனில் குறிப்பிட்ட நபர்களை தேர்ந்தெடுத்து 'Dismiss Admin' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தாலே போதும். மேலும் குரூப் அட்மினாக இருப்பவர்கள் தங்களது குருப்பின் ஐகான் (Icon), டெஸ்க்ரிப்ஷன் (Description) போன்றவற்றை யார் மாற்ற வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம். இதற்கு 'Group Info' வில் 'Group Setting' என்ற ஆப்ஷனை அணுகி விருப்பமானவர்களுக்கு மட்டும் குரூப் தகவலை எடிட் செய்யும் உரிமையை தரலாம்.