Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

துபாய்க்கு குறைந்த விலையில் விமான கட்டணத்துடன் செல்வது -சுற்றுலா 2

dubai international airport photo

தமிழ்நாட்டில் இருந்து துபாய் சென்று வருவதற்கான எளிய முறையை எங்கள் அனுபவத்தில் இருந்து உங்களுக்கு விளக்குகிறோம். துபாய்க்கு சென்னையில் இருந்தும், மதுரையில் இருந்தும் நான்கு மணி நேரத்தில் இருந்து ஐந்து மணி நேரத்திற்குள் சென்றடையலாம். மதுரையில் இருந்து ஸ்பைஸ் ஜெட்  (SpiceJet) விமானத்தில் 4 மணி 30 நிமிடத்தில் சென்றடையலாம். மதுரையில் இருந்து புறப்படும் மற்ற விமானங்கள் , நேரடியாக செல்லாமல் இந்தியாவில் உள்ள மற்ற விமான தலங்களுக்கு சென்று அங்கு உள்ள பயணிகளுடன் துபாய் சென்றடையும், இதனால் போக்குவரத்து நேரம் மிக அதிகம்.

சென்னையில் இருந்து எமிரேட்ஸ் (Emirates)இண்டிகோ (Indigo)ஏர் இந்தியா (AirIndia) போன்ற விமானங்கள் நேரடியாக துபாய்க்கு  4 மணி 30 நிமிடர்த்திக்குள் சென்றடையும்.துபாய்க்கு பயணம் செய்யக்கூடிய விமானங்களின் கட்டணங்கள் சில சமயங்களில் குறைந்த விலையில் இருக்கும். இதுவரை எங்கள் அனுபவத்தில் பார்த்த குறைந்த விலை, ரூபாய் 10,400. இது ஒரு வழிக்கான தொகை அல்ல, ரூபாய் 10,400க்கு நீங்கள் சென்னையில் இருந்து துபாய் செல்வதற்கும் , துபாயில் இருந்து சென்னைக்கு திரும்ப வருவதற்கான கட்டணம். இந்த குறைந்த கட்டணம் 30 நாட்களுக்கு முன் அல்லது விமானங்களின் சலுகை அறிவிப்பை பொறுத்து இருக்கும்.

முக்கிய குறிப்பு: நீங்கள் அரப் எமிரேட்ஸ் (Arab Emirates) விமானத்தை தவிர்த்து வேறு எந்த விமானத்தில் பயணம் செய்தாலும், ஓகே டு போர்ட் (OK TO BOARD) என்ற சான்று பெறவேண்டும். இது கடினமான ஒன்று அல்ல, துபாய் செல்வதற்கு விசா (VISA) வாங்கும் போது ஓகே டு போர்ட் (OK TO BOARD) சான்றையும் சுலபமாக பெற்று விடலாம்.நீங்கள் அரப் எமிரேட்ஸ் (Arab Emirates) விமானத்தில் பயணம் செய்தால், ஓகே டு போர்ட் (OK TO BOARD) அவசியம் இல்லை, இது துபாய் அரசாங்கத்தின் விமானம் என்பதால் விசா (VISA) மட்டும் இருந்தாலே போதும். துபாய் செல்வதற்கான விசா (VISA) கட்டணம் ரூபாய் 6,000 (டிசம்பர் 2017 தேதி படி) . ஓகே டு போர்ட் (OK TO BOARD) கட்டணம் ரூபாய் 400 அல்லது ரூபாய் 500.

உங்களிடம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது வேறு ஏதேனும் முறையில் இணையத்தில் பணம் செலுத்தும் வசதி இருந்தால், நீங்களே விமான கட்டணங்களை செலுத்திவிடலாம். உங்களிடம் இந்த வசதி இல்லை அல்லது தெரியவில்லை என்றால், நம்பிக்கையான சுற்றுப் பயண நிர்வாகங்களை அணுகினால், உங்களுக்கு சிரமம் இல்லாத வகையில் அவர்கள் விமான டிக்கெட் பெற்று தருவார்கள். உறவினர்கள் / நண்பர்கள் இருந்தால், அவர்களின் வீட்டில் தங்கிக்கொள்ளலாம் இல்லை என்றால் தங்குவதற்கும் சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கும் சிறந்த இடமாக தேர்வு செய்வது நல்லது.

தங்குவதற்கும் சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்கும், குறிப்பாக விமான நிலையத்திற்கு சுலபமாக செல்வதற்கும் சிறந்த இடமாக தேர்வு செய்வது மிக முக்கியமானது, சுலபமானதும் கூட. தங்கும் விடுதிகள் தேர்வு செய்வதற்கு நம்பிக்கையான இணையதளங்களில் ஒன்று ட்ரிப் அட்வைசர் (Trip Advisor). இந்த இணையத்தளத்தில் நம்மை போல் சுற்றுலா செல்பவர்களுக்கு உதவிட ஏகப்பட்ட பயணிகள் தங்களின் விடுதி அனுபவங்களையும், அருகில் இருக்கும் சுற்றுலா தளங்களை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து இருப்பார்கள்.

துபாய்க்கு குறைந்த விலையில் விமான கட்டணத்துடன் செல்வது -சுற்றுலா 2