ஜப்பானில் சைவ வகையை சேர்ந்த ராட்சச கொசு
வேலுசாமி (Author) Published Date : Apr 25, 2018 16:17 ISTWorld News
உலக மலேரியா தினமான இன்று உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்து வருகின்றன. உலகம் முழுவதும் இந்த நோயால் 3.3 பில்லியன் மக்கள் பாதிப்படைகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் மக்கள் மலேரியா நோயினால் இறக்கின்றனர். இந்த நோயை கட்டுப்படுத்த இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கடந்த 2007-இல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதியை உலக மலேரியா நாளாக அறிவித்தது.
இந்த நோயின் தாக்கம் பெரும்பாலும் ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக அளவில் இருக்கிறது. அங்கு வாழும் குழந்தைகளையும் இந்த நோய் விட்டுவைப்பதில்லை. சிறு வயதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பதால் குழந்தைகளை விரைவாக இந்த நோய் தாக்குகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைக்க வேண்டும். சுற்றுப்பகுதிகளில் நீர் தேங்கி கொசு உருவாகும் அபாயம் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். தற்போது பெரும்பான்மையான நோய் உருவாவதற்கு சுற்றுப்புற சுகாதாரமின்மையே காரணமாக அமைகிறது.
உலகில் தற்போது ஆயிரக்கணக்கான கொசு வகைகள் உள்ளது. இந்த கொசு வகைகளில் 100 கொசு வகைகள் ரத்தத்தை உணவாக எடுத்துக்கொள்வதுடன் நோய்களை பரப்பி மனிதர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஆனால் சில கொசு வகைகள் மலைப்பகுதிகளில் சைவமாக வாழ்ந்து வருகிறன்றன. ஆம், 'க்ரீன் பிளை( Crane fly) என்றழைக்கப்படும் கொசு வகைகள் ராட்சத உருவத்துடன் 12 செமீ நீளம் கொண்டதாக உள்ளது. இந்த கொசு வகைகள் சைவ உணவுகள் காணப்படும் இடங்களில் அதிகமாக காணப்படுகிறது.
பார்ப்பதற்கு ராட்சத உருவத்தில் இருப்பதால் இந்த வகை கொசுக்கள் நம்ம ஊர் கொசுக்களை போன்று எளிதில் பறப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் தத்தி தத்தியே செல்கிறது. இந்த வகை கொசுக்கள் முதன் முதலாக ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொசு இறக்கைகள் 8செமீ நீளம் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கொசு இறக்கைகள் அதை விட அதிகம் நீளம் கொண்டதாக உள்ளது.