Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

புளோரிடா பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

17 confirmed dead in florida shooting on high school

கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி சாதாரணமாக மக்களிடம் புழங்குவதால் வன்முறை சம்பவமும் அதிகரித்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டினால் பொது இடங்களிலும், பள்ளி கூடங்களிலும் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மார்ஜரி ஸ்டோன் மென் டக்ளஸ் என்ற உயர்நிலை பள்ளியில்  துப்பாக்கியுடன் ஒரு மர்ம நபர் நுழைந்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்களை நோக்கி காட்டு தனமாக சுட்டுள்ளார். இதனால் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறி அடித்து ஓடினர்.

இவர்களில் சிலருக்கு தோட்டா பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த போலீசார் பள்ளி வளாகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பிறகு துப்பாக்கி சூடு நடத்திய நபர் சரணடைந்தார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பள்ளியின் வளாகத்தில் 12 பெரும், பள்ளியின் வெளிப்புறத்தில் 3 பெரும் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மக்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது. சரணடைந்த மர்ம நபரை விசாரித்ததில் அவர் இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் நிகோலஸ் குருஸ் என்பது தெரியவந்தது. மேலும் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டதற்காக அவரை பள்ளியில் இருந்தும் நீக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் மூலம் அமெரிக்காவில் தற்போதுவரை பள்ளிகளில் மட்டும் 18 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

புளோரிடா பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு