பேனாவை ஆயுதமாக கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவரால் கடத்தப்பட்ட ஏர் சீன விமானம்
வேலுசாமி (Author) Published Date : Apr 16, 2018 10:24 ISTWorld News
சீனாவின், தெற்கு ஹூனான் மாகாணத்தின் தலைநகரான சாங்க்ஷ (Changsha) விமான நிலையத்தில் இருந்து ஏர் சீனா என்ற விமானம் சுமார் நூற்றுக்கும் அதிகமான பயணிகளுடன் நேற்று காலை 8:30 மணிக்கு கிளம்பியுள்ளது. புறப்பட்ட மூன்று மணிநேரத்திற்குள், சீனாவின் சர்வதேச விமான நிலையமான பெய்ஜிங் விமான நிலையத்தில் சரியாக 11:30 மணிக்கு வந்தடைய வேண்டும்.
ஆனால் இந்த விமானம் 12 மணி ஆகியும் வந்தடையவில்லை. மாறாக இந்த விமானம் புறப்பட்ட 1:15 மணி நேரத்திற்குள் 9:45 மணியளவில் சீனாவின் செங்க்சு என்ற விமான நிலையத்தில் (Zhengzhou Xinzheng International Airport) தரை இறங்கியுள்ளது. இது குறித்து விசாரித்ததில் மன நலம் பாதிக்கப்பட்டவர் பவுண்டைன் பேனாவை ஆயுதமாக காட்டி ஏர் சீனா விமானத்தை கடத்த முயன்றது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மன நலம் பாதிக்கப்பட்ட அன்ஹூவா என்ற நபர், இவருக்கு வயது 41. விமானத்தை கடத்த முயன்றுள்ளார். பைலட்கள் அவருடன் எப்படியோ ஒரு வழியாக அவருடன் போராடி அருகில் உள்ள செங்க்சு என்ற விமான நிலையத்தில் தரை இறக்கிவுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளும் இந்த சமபவத்தினால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.