Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ஆஸ்திரேலியா பெர்த் விமான நிலையத்தில் காப்பாற்றப்பட்ட ஈழ தமிழரின் குடும்பம்

Nadesalingam and his wife Priya with 2 daughters. photo credit - change.org

ஆஸ்திரேலியாவில் வாழும் ஈழ தமிழர் நடசேலிங்கம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அவருடைய  மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் ஆகியோர் விசாவின் (VISA) சட்ட பிரச்சனை காரணத்தினால் இலங்கைக்கு சிறப்பு விமானம் மூலம் அனுப்புவதற்காக ஏற்றிய பின் ஆஸ்திரேலியா அதிகாரிகள் திரும்ப விமானத்தில் இருந்து அழைத்து சென்றனர்.

பெரும்பாலான நாடுகளில் தற்பொழுது விசா பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்நாட்டின் குடிமக்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு இல்லாமல் போனதே இதற்கு முக்கிய காரணம்.வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் நபர்களால் உள்நாட்டில் இருக்கும் குடிமக்களுக்கு பெறும் பிரச்சனையாக உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகள், கடந்த வருடம் இயற்றிய புதிய விசா கட்டுப்பாடு சட்டத்தினால் வெளிநாட்டில் வேலைபார்த்த சிலர் நாடு திரும்பினர்.

இந்த சூழ்நிலையில் தான் ஆஸ்திரேலியாவில் வாழும் நடசேலிங்கத்துக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் வாழ்ந்த குயிஸ் லேண்ட் என்ற மாநகரத்தில் வசித்த மக்களும் பிற தமிழர்களும் அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் ஆன்லைன் பெட்டிஷன் இணையதளமான  "change.org" மூலம் போராட்டத்தை துவங்கினர். அதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மிக பெரிய ஆதரவு கிடைத்தது. இன்றைய தேதிப்படி சுமார் 82,000 க்கும் மேலானோர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த ஆன்லைன் பெட்டிஷன் குடிவரவு அமைச்சரான திரு பீட்டர் டட்டன் அவர்களுக்கு அனுப்பி, அவர்களை  காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டனர்.

அதன் வெற்றியாக தற்போது இவர்கள் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக ஆஸ்திரேலியாவில் வசிக்க செய்துள்ளது. இவர்கள் கடந்த 2012 ஆண்டு முதல் சென்ட்ரல் குயின்ஸ்லேண்ட் என்ற இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய குழந்தைகள் ஆஸ்திரேலியாவில் பிறந்ததால் வேறு எந்த நாட்டிற்கும் சென்றது இல்லை. இவர்களது விசாவை புதுப்பிக்கவும் பல்வேறு  முயற்சிகள் எடுத்தும், அவர்கள் கோரிக்கை நிராகரிக்க பட்டுவந்தது. இந்நிலையில் தான் அவர்களுக்காக போராடிய மக்களினால் விசாவை புதுப்பித்து ஆஸ்திரேலியாவில் வாழ நடவடிக்கை எடுக்க பட்டுவருகிறது.

ஈழ தமிழருக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

ஆஸ்திரேலியா பெர்த் விமான நிலையத்தில் காப்பாற்றப்பட்ட ஈழ தமிழரின் குடும்பம்