Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கல்யாணத்திற்கு வருபவர்கள் கையோடு சாப்பாடும் கொண்டு வந்துருங்க - இளவரசர் திருமணம்

இளவரசர் திருமணத்தில் வருகை தரும் பொது மக்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் இளவரசரான ஹாரி, பிரிட்டன் அரச குடும்பத்தில் பிறந்து ஆறாவது அரச வாரிசாக அரியணையில் அமர உள்ளார். இவர் அரசர் சார்ல்ஸ் மற்றும் டயானா ஆகியோருக்கு இரண்டாவது மகனாவார். இவருக்கு வரும் 19-ஆம் தேதி இங்கிலாந்தில் வின்ஸ்டன் கேஸ்டில் என்ற இடத்தில் கோலாகலமாக திருமணம் நடக்க உள்ளது. இவர் ஹாலிவுட் நடிகை மேகன் மார்களே என்பவரை மணக்கிறார். இவர் அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும் சீரியல் காட்சிகளிலும், ரிமெம்பர் மீ, ஹாரிபுள் பாஸ் போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இருவரும் கடந்த 2016 முதலே காதலித்து வந்துள்ளனர். பின்னர் 2018இல் கோடைகாலத்தில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி இவர்களின் திருமணம் இங்கிலாந்தில் வரும் 19-ஆம் தேதி ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நடைபெற உள்ளது. இவர்களுடைய திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலர் மட்டுமே அழைப்பிதழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பில் இரண்டு பிரிவுகளின் படி பொது மக்களுக்கும் அழைப்புகளை விடுத்துள்ளனர். இதில் முதல் பிரிவில் நெருங்கிய நண்பர்கள், ஆசிரியர்கள், உடன் படித்தவர்கள் போன்ற 600 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு உணவு அளிக்கப்படும். இரண்டாவது பிரிவில் 1200 பொது மக்களுக்கு அழைப்புகளை விடுத்துள்ளனர். இவர்களுக்கு குடிநீர், உணவு எதுவும் வழங்க முடியாது. திருமணத்திற்கு வரும்போதே கையில் உணவு கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது பிரிவின் கீழ் திருமணத்தை காண வரும் மக்கள் மணமக்களை பார்க்க கூட முடியாது, அங்குள்ள புல்வெளியில் அமர்ந்து கொண்டு மணமக்கள் முத்தமிடும் காட்சியை மட்டும் காணலாம். சாப்பாடு போடவில்லை என்றாலும் பொது மக்கள் கொண்டு வரும் பரிசு பொருட்கள் வாங்கி கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்யாணத்திற்கு வருபவர்கள் கையோடு சாப்பாடும் கொண்டு வந்துருங்க - இளவரசர் திருமணம்