Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பசிபிக் பெருங்கடலில் விழுந்த சீனாவின் டியான்காங் விண்வெளி நிலையம்

தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி நிலையம்.

சீனாவின் டியான்காங்-1 என்ற விண்வெளி நிலையம் செயலற்று போய்விட்டதாக கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி தெரிவித்தது. அதன்பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றி வந்துகொண்டிருந்த இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வரத் தொடங்கியது. விண்வெளி நிலையத்தின் சில பாகங்கள் இன்று  பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் யூகித்தனர். மார்ச் 30-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதிக்குள் டியான்காங்-1 ஆராய்ச்சி நிலையம் பூமியில் விழும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் பூமியின் வளிமண்டல பகுதிக்குள் இன்று நுழைந்த விண்வெளி நிலையம், அதிவேகமாக பூமியை நோக்கி பாய்ந்து வந்தபோது காற்றின் உராய்வினால் அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிட்டது. விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் தெற்கு பசிபிக் பகுதியில் விழுந்ததாக சீனாவின் விண்வெளி  பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி 10.15 மணியளவில் ஒரு பேருந்து அளவிலான பாகம் பூமியில் விழுந்திருப்பதாக சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அவை பெரும்பாலும் விண்வெளி நிலையத்தின் என்ஜின் போன்ற கனமான பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தகிட்டி தீவின் வடமேற்கில் விழுந்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பூமியில் விழுந்த பாகங்களை தேடும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான பாகங்கள் அழிந்துவிட்ட நிலையில், தெற்கு பசிபிக்கில் தண்ணீர் நிறைந்த பகுதியில் விண்வெளி ஆய்வுக்கூட பாகங்கள் விழுந்திருப்பதால் பூமிக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

பசிபிக் பெருங்கடலில் விழுந்த சீனாவின் டியான்காங் விண்வெளி நிலையம்