Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

லண்டனில் பீட்டா அமைப்பினரை வெளியேற்றிய பாதுகாப்பு அதிகாரிகள்

நாய்கள் கண்காட்சியில் பீட்டா அமைப்பை சேர்ந்த இருவர் திடீரென்று அரங்கில் வெற்றி பெற்ற நாய் வகையை அறிவிக்கும் போழுது அறிவிப்பு பலகையுடன் ஓடினர். photo credit @Independent

பீட்டா, 2017-ஆம் ஆண்டில் தமிழர்களை மறந்திருக்க வாய்ப்பு இல்லை, என்ன தான் சர்வதேச அமைப்பாக இருந்தாலும், பெரும்பலத்துடன் இருந்தாலும் தமிழர்களிடம் மண்ணை கவ்வியது உலகறிந்த விஷயம். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்த  பீட்டாவுக்கு எதிராக ஜனவரி 2017இல் உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் ஒன்றுதிரண்டு வரலாறு காணாத போராட்டத்தை நிகழ்த்தி விரட்டினர். அன்று முதல் பீட்டாவின் விளம்பர படங்களில்  நடித்த நடிகர்களும் கூட பீட்டாவை உதறினார்கள், இன்னும் சிலர் பீட்டாவில் வேளையில் இருப்பதையே சொல்ல தயங்கினார்கள், அந்த அளவிற்கு வலுவானதாக இருந்தது தமிழர்களின் போராட்டம்.

பீட்டா அமைப்பினர் மீது உலகளவில் குற்றச்சாற்றுகள் இருந்தாலும், தங்களை விலங்குகளின் பாதுகாவலர்கள் என்று காண்பித்து கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில் தற்போது லண்டனில் பிர்மிங்கம் (Birmingham) என்ற இடத்தில் 08/03/2018 முதல் 11/03/2018 ஆம் தேதி வரை நடந்த உலக புகழ் பெற்ற க்ருப்ட்ஸ் (Crufts) நாய்கள் கண்காட்சியில் பீட்டா அமைப்பை சேர்ந்த இருவர் திடீரென்று அரங்கில் வெற்றி பெற்ற நாய் வகையை அறிவிக்கும் போழுது அறிவிப்பு பலகையுடன் ஓடினர், அதை சற்றும் எதிர் பாராத செல்ல நாய்களின் உரிமையாளர்கள் தங்களது  நாய்களை பாதுகாக்க, உடனடியாக கண்காட்சியின் காவலர்கள் இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 'நாய் கண்காட்சி' என்பது அனைத்து நாடுகளிலும் புகழ் பெற்றது. இதில் ஒவ்வொரு நாயின் திறமையும், ஒழுக்கத்தையும், உடல் கட்டமைப்பையும் சிறப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்து அதற்கான சான்றிதழை வழங்கி கவுரவிப்பார்கள். அவ்வாறு வெற்றி பெற்ற நாயின் மரபு வழியில் வரும் குட்டிகளும் மிக ஒழுக்கத்துடனும் திறமையாக இருக்கும், இவைகளின் விலையும் சான்றுதலுக்கேற்ப அதிகமாக இருக்கும். 

நாய்கள் தற்போது செல்ல பிராணிகளில் இருந்து வீட்டின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. நாய்களை உரிமையாளர்கள் தங்களின் குழந்தைகள் போல பார்த்து அதற்கு தேவையான உணவுகளையும், குணாதிசயங்களும் மேம்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பீட்டா அமைப்பு இவ்வாறு செய்தது செல்ல பிராணிகள் வளர்ப்பவர்களிடம் மிகுந்த கோபத்தை உண்டாக்கி உள்ளது.

லண்டனில் பீட்டா அமைப்பினரை வெளியேற்றிய பாதுகாப்பு அதிகாரிகள்