நிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி
வேலுசாமி (Author) Published Date : Jun 22, 2018 17:20 ISTWorld News
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, க்யூரியாசிட்டி விண்கலம் உதவியுடன் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அல்லது வேறு உயிரினங்கள் வாழ்கின்றதா என்பது குறித்து பல நாட்களாக ஆராய்ந்து வருகிறது. சமீபத்தில் க்யூரியாசிட்டி அனுப்பிய மாதிரியை ஆய்வு செய்ததில் பல வருடங்களுக்கு முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் வீச போவதாக நாசா தெரிவித்தது. இதன் மூலம் இந்த புழுதி புயலால் ரோவர் விண்கலம் பாதிப்படைய வாய்ப்புள்ளதாகவும், புழுதி புயலை படம் பிடிக்கும் என்றும் நாசா தெரிவித்திருந்தது. நாசாவின் அறிவிப்பின்படி கடந்த ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்த புயலில் காற்றின் வேகம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
இதனால் ரோவர் விண்கலத்தின் சில பகுதிகள் பாதிப்படைந்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஒரு வாரமாக நிலவி வரும் புழுதி புயலால் செவ்வாய் கிரகத்தின் நிறமே மாறியுள்ளது. வழக்கமாக மஞ்சளாக காணப்பட்ட செவ்வாய் கிரகம் தற்போது இந்த புயலால் சிவப்பாக மாறியுள்ளது. இதற்கான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.