கூகுளில் வேலைக்கேட்ட 7வயது சிறுமிக்கு சுந்தர் பிச்சையின் அன்பான பதில்
வேலுசாமி (Author) Published Date : May 08, 2018 17:56 ISTWorld News
நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பட்டி தொட்டியெங்கும் இணைய உலகில் முடிசூடா மன்னனாக விளங்கி வருகிறது கூகுள். இன்றைய மக்களுக்கு இணையத்தின் மூலம் கிடைக்கும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் கூகுளின் தேடல் பெரும் உதவியாக இருந்து வருகிறது. இது தவிர சிறந்த பொழுது போக்கு அம்சமாக விளங்கும் யூடியூப், ஜிமெயில், பிரவுசர் உள்ளிட்ட கூகுளின் செயலிகளும் மக்களிடம் பலத்த வரவேற்பினை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் புது அம்சங்களை வெளியீட்டு வரும் கூகுளின் நிறுவனத்தில் பனி புரிவது என்பது தற்போதைய பொறியாளர்களின் எதிர்கால கனவாக இருந்து வருகிறது.
தற்போது பொறியாளர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இங்கிலாந்தை சேர்ந்த ஏழு வயது சிறுமி தனக்கு கூகுளில் வேலை வேண்டுமென கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்களுக்கு மிகவும் அழகாக ஒரு கடிதத்தினை எழுதியுள்ளார். இந்த சிறுமி எழுதிய கடிதத்தில் "அன்பான கூகுள் எஜமானர் அவர்களுக்கு,
என் பெயர் க்ளோயி. நான் பெரியவளானதும் கூகுளில் பணிபுரிய ஆசைப்படுகிறேன். இது தவிர எனக்கு சாக்லேட் நிறுவனத்தில் பணிபுரிவது மற்றும் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் கலந்து கொள்வதும் புடிக்கும். நான் நீச்சல் பயில சனிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை செல்வேன்.
எனக்கு கூகுளில் வேலை கிடைத்தால் பீன் பேக்கில்(Bean Bag) அமர்ந்து கொண்டு சறுக்கி விளையாடலாம் என்று சொல்கிறார் எனது அப்பா. எனக்கு கணினி மிகவும் பிடிக்கும். என்னிடம் ஒரு டேப்ளட் உள்ளது. அதில் நான் தினமும் கேம்ஸ் விளையாடுவேன். என்னுடைய அப்பா, அம்மா, ஆசிரியர் அனைவரும் நான் நன்றாக படிக்கிறேன். இப்படி நன்றாக படித்தால் ஒரு நாள் கண்டிப்பாக உனக்கு கூகுளில் வேலை கிடைக்கும் என தெரிவிக்கின்றனர். எனக்கு 5வயதில் ஹோலி என்ற தங்கை இருக்கிறாள். அவளுக்கு பொம்மைக்கு ஆடை உடுத்துவது மிகவும் பிடிக்கும்.
கூகுளில் வேலை கிடைக்க அதில் நீ அடிமையாகி விட வேண்டும் என அப்பா சொல்கிறார். ஆனால் எனக்கு கூகுள் அவ்வளவாக தெரியாது. கூகுளில் வேலை கிடைக்க அப்பா தான் கடிதம் எழுத சொன்னார். அதனால் தான் எழுதினேன். இவ்வளவு நேரம் படித்ததற்கு நன்றி" என்று அந்த சிறுமி அழகாக எழுதியுள்ளார். இந்த சிறுமியின் கடிதத்திற்கும் சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார்.
அதில் அவர் "அன்பு க்ளோயி, கடிதம் எழுதியதற்கு நன்றி, உன்னுடைய கணினி மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை பாராட்டுகிறேன். தொழில்நுட்ப திறமையை அதிகரித்து கொள்ள வேண்டும். கடின உழைப்பில் உனது கனவை செலுத்தினால் நிச்சயம் நீ உன்னுடைய கனவான கூகுளில் பணிபுரிவது, ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொள்வது போன்றவை நிச்சயம் நிறைவேறும். நீ பள்ளி பருவத்தை முடித்த பிறகு உன்னுடைய விண்ணப்பத்தை ஏற்று கொள்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.