Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மனிதர்களின் உடல் உறுப்பு சிகிச்சைக்காக ஜப்பானில் விசேஷமாக வளர்க்கப்படும் பன்றிகள்

மனிதர்களின் உடல் உறுப்பு சிகிச்சைக்காக ஜப்பானில் புதுவிதமாக வளர்க்கப்படும் பன்றிகள்.

மனிதர்களில் உடல் உறுப்புகள், அவர்களது தீய பழக்கங்கள், சுற்று சூழல் மற்றும் நடைமுறைகள் போன்றவைகளால் பெரும்பாலோனோருக்கு செயலிழந்து வருகிறது. உடல் உறுப்புகளால் பாதிப்படைந்தவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள் நவீன அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது மாற்று உறுப்புகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் சமீப காலமாக பல்வேறு நாடுகளில் பன்றிகளில் இருந்து உடல் உறுப்புகளை எடுத்து மனிதர்கள் சிகிச்சை மூலம் மாற்றம் செய்து வருகின்றனர். இத்தகைய அறுவை சிகிச்சைகள் ரஷ்யா, நியூசிலாந்து உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

மனிதர்களின் உடல் உறுப்புகளுடன் பன்றிகளின் உடல் உறுப்புகள் பெருமளவு ஒத்து போவதால் இத்தகைய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் வேகமாக நாடுகளில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில் இத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

இதற்கு மாற்றாக மனிதர்களின் உடல் உறுப்பு அறுவை சிகிச்சைக்கு தனியாக பன்றிகளை புதுவிதமாக வளர்த்து வருகின்றனர். இத்தகைய புதுவித ஆராய்ச்சிகளை கியோடா பல்கலைகழகம் மற்றும் மெய்ஜி பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிகிச்சையை மேற்கொண்டு வெற்றி அடைந்துள்ளனர்.

இத்தகைய நடைமுறைகளால், பன்றிகளின் உடல் உறுப்புகள் மூலம் சிகிச்சை செய்யப்பட்ட மனிதர்களுக்கு 40 விதமான வைரஸ் கிருமிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய பன்றிகளை, வைரஸ்களால் தாக்கப்படாத, நோய் கிருமிகளால் தாக்கப்படாத பன்றிகளாக வளர்த்து வருகின்றனர்.

இந்த பன்றிகளுக்கு  செயற்கையாக பாலூட்டி நன்கு சுத்தரித்து வருகின்றனர். பன்றிகளின் எடை 1.8 கிலோவை ஏறியவுடன் அவற்றின் உடல் உறுப்புகளை எடுத்து பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சிகிச்சையானது பல்வேறு சோதனைகளில் வெற்றி அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மனிதர்களின் உடல் உறுப்பு சிகிச்சைக்காக ஜப்பானில் விசேஷமாக வளர்க்கப்படும் பன்றிகள்