ஜூலை 27இல் நிகழ உள்ள சந்திர கிரகணம் 1 மணி 45 நிமிடங்கள் வரை நீடிக்குமாம்
புருசோத்தமன் (Author) Published Date : Jul 24, 2018 16:21 ISTWorld News
வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 27ஆம் தேதியில் நிகழ உள்ள சந்திர கிரகமானது 1 மணிநேரம் 45 நிமிடங்கள் வரை நீடிக்க உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முறை சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க உள்ளது. இதனால் மக்கள் தொலைநோக்கியுடன் ஆர்வமுடன் வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப இம்முறை அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.
ஆனால் தற்போது மழைக்காலம் என்பதால் முழுமையான சந்திர கிரகணத்தை காண்பதற்கு மேகங்கள் தடையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரன் சூரியனை மறைப்பது போன்று இருக்கும். மேலும் இந்த வருடத்தில் மட்டும் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகிறது. கடந்த ஜூலை 13இல் சூரிய கிரகணம் நடைபெற்றது. இதன் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 27இல் சந்திர கிரகணம் நடைபெற வுள்ளது.
இதனை அடுத்து ஜூலை 31ஆம் தேதியில் செவ்வாய் கிரகமானது பூமிக்கு மிக அருகில் வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது செவ்வாய் கிரகமானது வழக்கமாக தெரிவதை விட இரண்டு மடங்கு பெரியதாக தெரிய வாய்ப்புள்ளது. வரும் ஜூலை 27இல் இந்தியாவில் நடைபெற உள்ள இந்த சந்திர கிரகமானது சரியாக இரவு நேரத்தில் 11:45 மணியளவில் நடைபெறுகிறது. அப்போது தொடங்கி நள்ளிரவு 1:30 மணிக்கு சந்திர கிரகணம் முழுமையடைகிறது.