Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் காணாமல் போன பெண்ணின் சடலம்

கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போன பெண்ணின் உடல் ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போன பெண்ணின் உடல் ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. வா டிபா (Wa Tiba) என்பவர் இந்தோனோஷியாவில் உள்ள பெர்சியபன் லாவெலா (Persiapan Lawela) என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 54. கடந்த வியாழக்கிழமை அன்று வா டிபா தனது தோட்டத்திற்கு தனியாக சென்றுள்ளார். தனியாக சென்ற இவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் நீண்ட நேரம் தேடி அழைத்துள்ளனர்.

காணாமல் போன வா டிபா குறித்து இரண்டு நாட்களாகியும் எந்த தகவலும் வராததால் அப்பகுதியே சோகத்தில் காணப்பட்டது. இந்நிலையில் அந்த பகுதியில் 30அடி நீல ராட்சத மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் உருண்டு வந்ததை கிராம மக்கள் கண்டுள்ளனர். பின்னர் அதிர்ச்சி அடைந்து ராட்சத மலைப்பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்ததில் காணாமல் போன வா டிபா பெண்ணின் சடலம் காணப்பட்டது. இதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் வா டிபாவின் சடலத்தை மீட்டு இறுதி சடங்கு செய்தனர். காணாமல் போன வா டிபாவின் கிராமம் முழுவதும் காடுகள், குகைகள் மற்றும் மலைப்பாறைகளால் ஆனது. இதனால் அப்பகுதியில் மலை பாம்புகள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்று கடந்த மார்ச் மாதமும் அருகிலுள்ள சலுபிரோ என்ற கிராமத்தில் விவசாயி ஒருவரை மலைப்பாம்பு விழுங்கியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் ஒவ்வொரு மாதமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது என வேதனையுடன் தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் காணாமல் போன பெண்ணின் சடலம்