அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி நடத்தி ஹார்ட்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு 30 ஆயிரம் டாலர் நிதியுதவி
விக்னேஷ் (Author) Published Date : Nov 13, 2017 17:43 ISTWorld News
ஹார்ட்வார்ட் பல்கலை கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு ஏராளமானோர் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதில் தமிழக அரசு சார்பில் 10 கோடி வழங்கியுள்ளது. இதனை வாழ்த்தும் விதமாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் முதலமைச்சரை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும் நடிகர் விஷால், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது நிதியுதவியை வழங்கியுள்ளனர். இதனை அடுத்து அமெரிக்காவில் மிஸ்ஸோரி தமிழ் சங்கமானது அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு நிதி திரட்ட முத்தமிழ் விழா நடத்தியது.
இந்த விழாவில் தமிழ் நாடகம், நடனம், பாடல் காட்சிகள் இடம் பெற்றன. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் சத்யன், செந்தில் தாஸ், என்.எஸ்.கே. ரம்யா மற்றும் அனிதா ஆகியோர் கலந்து கொண்டு பாடினர். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த 30,000 டாலர் தொகையை ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு மிஸ்ஸோரி தமிழ் சங்கம் வழங்கியது. எஞ்சியுள்ள தொகையை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்களின் பங்களிப்பாக அளித்து வருகின்றனர்.