வியப்பில் ஆழ்த்தும் உலகின் முதல் விண்வெளி 360 டிகிரி வீடியோ
வேலுசாமி (Author) Published Date : Apr 18, 2018 16:48 ISTWorld News
நம்மில் பல பேருக்கு பூமியில் என்ன நடக்கிறது என்பதை பூமிக்கு வெளியே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பூமிக்கு வெளியே வளிமண்டலத்தில் என்ன நடக்கிறது. அங்கு இருந்தால் நாம் எப்படி உணர்வோம் போன்றவற்றை அறிய அனைவரிடத்திலும் ஆர்வம் இருக்கிறது. தற்போது அதனை பூர்த்தி செய்யும் விதமாக நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் பல கிமீ தூரத்திற்கு மேல் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேசில், இத்தாலி போன்ற நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாகியுள்ளது. இந்த நிலையங்களை பழுது பார்க்க இரண்டு வீரர்கள் காலத்திற்கு தகுந்தவாறு பூமியிலிருந்து அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு உணவு மற்றும் பல்வேறு உபகரணங்களும் பூமியில் இருந்து அனுப்பப்படும். தற்போது மனித வள மேம்பாட்டு நிறுவனமும், நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனமும் இணைந்து விண்வெளி நிலையத்தை 3D விரிச்சுவல் கேமிராவை கொண்டு படம்பிடித்துள்ளனர்.
இந்த விடியோவானது ஒரு டாக்குமெண்டரி நிகழ்ச்சிக்காக திரைப்பட தயாரிப்பாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த விடியோவை நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவானது விண்வெளியில் 3D விரிச்சுவல் கேமிராவை கொண்டுஎடுக்கப்பட்ட முதல் விண்வெளி சார்ந்த 360 டிகிரி சுழலக்கூடிய விடியோவாகும். இந்த வீடியோ தற்போது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி கவர்ந்து வருகிறது.