வடகொரிய எல்லையை கடந்து இருமாநில உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட வடகொரிய அதிபர்
வேலுசாமி (Author) Published Date : Apr 27, 2018 12:16 ISTWorld News
கொரியா தீபகற்பத்தில் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்தி வந்ததால் பதற்றமாக காணப்பட்டது. இதனால் பொருளாதார தடைகளை ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் வடகொரியா மீது விதித்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் தென்கொரிய அழைப்பை ஏற்று வடகொரிய ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டன. இதன் பிறகு தென் கொரியா முக்கிய பிரமுகர்கள் வடகொரியாவுக்கு சென்று அதிபர் கிம் ஜோங் உன் என்பவரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளின் உச்சி மாநாடு ஏப்ரல் 27இல் (இன்று) நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி இன்று பான்முன்ஜியோம் என்ற கிராமங்களில் இருநாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை வரவேற்றார். வடகொரியாவின் எல்லையை கடந்து உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு கிம் ஜோங் உன் தென்கொரிய அதிபரை சந்தித்துள்ளார். இதனை இரு நாட்டு பத்திரிகையாளர்களும் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
1953-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் கொரியா போருக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதன் முறையாகும். மேலும் இந்த உச்சி மாநாட்டின் நினைவாக அமைதி கிராமமான பான்முன்ஜியோம் கிராமத்தில் மரங்களை நட உள்ளனர். இதற்காக இரு நாட்டில் இருந்தும் தண்ணீர் மற்றும் மண் போன்றவை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை தொடர்ந்து அடுத்த மாதத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உண்ணும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்து பேச உள்ளனர்.