ட்ரம்பிற்கு அமைதி பேச்சுவார்த்தை தூது அனுப்பிய கிம் ஜோங் உன்
கோகுல் சரவணன் (Author) Published Date : Apr 09, 2018 16:11 ISTWorld News
2018-இன் ஜூலை மாதத்திற்குள் வடகொரியா அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்திருந்த நிலையில் இப்போது வடகொரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு நட்பு அழைப்பு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் பலமுறை வடகொரியா அதிபரான கிம் ஜோங் உன்-ஐயும் அவரது அணு ஆயுத கொள்கைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் ஆகிவற்றிற்கு கடும் கண்டனம் தெரிவித்தவண்ணம் இருந்தார். மேலும் சமீபத்தில் வடகொரியாவோடு வணிகம் செய்தல் அமெரிக்காவுடனான நட்பில் பிளவு ஏற்படும் என்று உலக நாடுகளிடம் அறிவித்திருந்தார். மேலும் சில கடல் வலி வணிக நிறுவனங்களுக்கு கடுமையான விதிமுறைகளையும் பிறப்பித்திருந்தார்.
உலக நாடுகள் அனைத்தையும் வடகொரியாவின் அணு ஆயுத செயல்பாடுகளை முறியடிக்க ஒன்று சேரவும் கேட்டிருந்தார். ட்ரம்பின் நடவடிக்கைகளாலும் கிம் ஜோங் உன்-னின் அணு ஆயுத சோதனைகளிலும் முன்றாம் உலகப் போர் ஏற்படலாம் என்ற அச்சம் பரவலாகவே காணப்பட்டது.
இந்நிலையில் வடகொரியா உயர் அதிகாரிகள் சிலர் அமெரிக்கா உயர் அதிகாரிகள் சிலருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் இந்தியில் வடகொரியாவின் அதிபர் கிம் அதிபர் ட்ரம்பை சந்திக்க விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அவர் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறு ஞாயிறன்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டது.
இந்த பேச்சுவார்த்தை இப்போது முதற்கட்டதில் இருப்பதாகவும் மே மாதம் இந்த பேச்சுவார்த்தை ஒரு உச்சிமாநாட்டில் நடைபெறலாம் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
பல காலமாகவே கொரியாவிலும் ஜப்பானிலும் இருக்கும் அமெரிக்கா படைகளை திரும்ப அழைத்துக்கொண்டாள் அணு ஆயுத கொள்கைகளை கைவிடுவது பற்றிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கிம் ஜோங் உன் கூறிவந்தார். இந்நிலையில் இப்போது ஏற்பட்டிருக்கும் நட்பு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு பாராட்டத்தக்கது என்று தென்கொரியா அதிபர் கோரியுள்ளார். இருந்தாலும் வடகொரியா இந்த அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் டிரம்ப் கிம் ஜோங்-ஐ சின்ன ராக்கெட் மனிதன்() என்று பலமுறை கேலி செய்தும் இப்போது வந்திருக்கும் அமைதிக்கான தூது நேர்மறையானது என்று பலர் கருதுகின்றனர். சிலர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
பல வருடங்களாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் அமெரிக்காவை அச்சத்தில் மூழ்கடித்தது என்று கூட கருதலாம். இவை அனைத்திற்கும் காரணம் 1950-93 வரை வாடா மற்றும் தென் கொரியா இடையே நடந்த போர் எந்த ஒரு சமாதான உடன்படிக்கையும் கையெழுத்திடாமல் தற்காலிக யுத்த நிறுத்தம் வாயிலாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதே என்று கருதப்படுகின்றது.