1372 ரோபோட்ஸ் ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை
வேலுசாமி (Author) Published Date : Apr 03, 2018 09:51 ISTWorld News
நாளுக்கு நாள் மனிதர்களின் கண்டுபிடிப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரித்து வரும் புதிய கண்டுபிடிப்புகளால் இவ்வுலகம் நவீனமாகி கொண்டே வருகிறது. இந்த அரிய கண்டுபிடிப்புகளில் பல கின்னஸ் சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது இத்தாலியில் ரோபோட்டுகள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1,372 ஆல்பா 1 எஸ் ரக ரோபோட்டுகள் நடனமாடி அசத்தியுள்ளது. இது தற்போது புதிய உலக சாதனை இடத்தை பதிவு செய்துள்ளது.முன்னதாக சீனாவில் 1069 ரோபோட்டுகள் நடமாடியது உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை 1372 ரோபோட்டுக்கள் இணைந்து இத்தாலியில் முறியடித்துள்ளது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த ரோபோட்டுகள் 40 செமீ உயரம் உள்ளது. அலுமினியத்தால் செய்யப்பட்டு பிளாஸ்டிக்கால் மூடப்பட்டுள்ளது. இந்த உலகச்சாதனை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.