Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாயின் மூலம் எஜமானருக்கு துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்போது உலகம் முழுவதும் செல்ல பிராணிகளாக குடும்பத்தாருடன் அன்போடு பழகி வளர்க்கப்பட்டு வருகிறது நாய் இனங்கள். நாய்களின் அன்பு மற்றும் அதன் விசுவாசத்தினால் மனிதர்கள் அதனை மிகவும் பாதுகாப்பானதாக வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் ஒரு வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டு வந்த பாலே என்ற நாய் ஒன்று தனது எஜமானரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் என்ற பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரெமி. இவர் ‘பாலே’ என்று பெயரிடப்பட்ட செல்ல நாயை தனது வீட்டில் நீண்ட நாட்களாக வளர்த்து வந்தார்.

வழக்கம் போல் ஆனந்தமாய் துள்ளிக்குதித்து விளையாடிய பாலே செல்ல பிராணி திடீரெனெ அவரது இடிப்பில்பெல்ட்டில் வைத்திருந்ததுப்பாக்கியை பறித்துள்ளது. பின்பு என்னவென்று அறியாத அந்த பிராணி எதிர்பாராதவிதமாக தனது காலால் துப்பாக்கியின் பிஸ்டலை இழுத்ததால் துப்பாக்கிவெடித்து ரிச்சர்ட் ரெமி உடலில் குண்டு பாய்ந்துள்ளது. இதனால் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அவசர உதவி மையத்தின் நம்பருக்கு அழைத்து எனது நாய் சுட்டுவிட்டது உதவிக்கு வாருங்கள் என அலறியுள்ளார். விரைந்து வந்த அவசர உதவி குழுவினர்  அவரை காயங்களுடன் மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு