குடிநீர் பாட்டில்களில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் ஆய்வில் புதிய தகவல்
வேலுசாமி (Author) Published Date : Mar 15, 2018 09:42 ISTWorld News
மனிதனின் அடிப்படை தேவைகளுள் ஒன்று தண்ணீர். தண்ணீரின்றி ஒரு மனிதனால் ஒரு வாரம் மட்டுமே உயிர் வாழ முடியும். இத்தகைய தண்ணீரை தற்போது தனியார் நிறுவனங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து மக்களுக்கு அளிக்கிறது. எளிதில் கிடைக்கிறது என்பதால் உலகத்தில் பாதிக்கு மேல் இத்தகைய தண்ணீரை தான் பருகுகிறோம்.
இந்த பிளாஸ்டிக் பாட்டில்களில் கிடைக்கும் தண்ணீரில் இருக்கும் அபாயம் மக்களுக்கு புரிவதில்லை. தாகத்தை தீர்க்க இதனால் என்ன ஆக போகிறது என்று மெத்தனமாக அதை பருகுறோம். தற்போது ஓர்ப் மீடியா என்ற அமைப்பு உலகம் முழுவதும் 9 நாடுகளை சேர்ந்த 11 பிராண்டுகளின் குடிநீரை சோதனை செய்து பார்த்ததில் அதில் முழுவதும் சிறிய அளவிலான ஏராளமான பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த சோதனையில் இந்தியாவை சேர்ந்த பிசிலரி பிராண்டும் அடங்கும். இந்த சோதனையானது அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்துள்ளது.
இது குறித்து அந்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஷெரி மேசன் என்பவர் கூறுகையில் "தனியார் நிறுவனங்களில் குறிப்பிட்ட சில நிறுவனங்களை குற்றம் சுமத்துவதற்காக இந்த சோதனை முயற்சி நடத்தவில்லை. உலகத்தில் அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் நிறைந்துள்ளது. இந்த பிளாஸ்டிக் எங்கு பரவலாக காணப்படுகிறது என்பதை அறியவே இந்த சோதனை நடத்தப்பட்டது" என்று அவர் தெரிவித்துள்ளார்.