அவசர நிலை பிரகடனம் செய்தது சிங்கள அரசு
கோகுல் சரவணன் (Author) Published Date : Mar 06, 2018 15:37 ISTWorld News
இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்தது சிங்கள அரசு.
இலங்கையில் சிங்கள அரசு பத்து நாள் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே இலங்கையின் பெரும்பான்மையான பௌதர்களுக்கும் சிறுபான்மையிரான இஸ்லாமியர்களுக்கும் இடையே கடும் கலவரம் நடந்து வருகிறது. அந்த போராட்டம் இப்போது வலுவடைந்துள்ளதாலும் மேலும் பரவக்கூடும் என்பதாலும் சிங்கள அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.இலங்கையில் கடந்த ஒரு வருட காலமாகவே பௌத்த மதத்தினருக்கும் இலங்கை வாழ் இஸ்லாமியர்களுக்கும் கடும் சீற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தளங்களின் மேல் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்லாமியர்கள் இலங்கையின் பெரும்பான்மயானா பௌத்த சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.
அந்த தாக்குதலில் பௌத்த இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார் அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அனால் சிகிச்சை பலனின்றி அந்த பௌத்த இளைஞர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பௌத்தர்கள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் வீடுகள் அலுவலகங்கள் போன்றவர்த்திற்கு தீயிட்டு கொளுத்தினர். இந்த சம்பவம் தற்போது இலங்கையில் மதக் கலவரமாக மாறியுள்ளது.
அம்பாறையில் ஏற்பட்ட மதக்கலவரம் நேற்று கண்டி மாவட்டத்திற்கும் பரவியதால் அங்கு அசாதாரண சூழ்நிலை உருவானது. இதைத் தொடர்ந்து இலங்கை அரசு நேற்று கண்டியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. தற்போது இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது.
இலங்கையின் சிறுபான்மையிரான இஸ்லாமியர்கள் இலங்கையின் 9% மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.