வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய உயிரினம் - வைரல் வீடியோ
விக்னேஷ் (Author) Published Date : Aug 13, 2018 11:22 ISTWorld News
நாளுக்கு நாள் ஏலியன் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் குறித்த புது புது விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதும் ஏலியன் குறித்த விடியோ ஒன்றும் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பார்ப்பதற்கு பாஸ்கட் ஸ்டார்பிஷ் (Basket StarFish) போன்ற உருவம் கொண்டிருக்கும் அமைப்பு ஒன்று தாமாகவே சுருங்கி விரிகிறது.
கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதனை கண்டவர்கள் அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் கண்டு வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர். வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விசித்திரமான கடல்வாழ் உயிரினம் ஏலியனாக இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இந்த உயிரினம் வியட்நாமில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கியான் காங் ப்ரோவின்ஸ் (Kien Giang province) என்ற இடத்தில் இந்த உயிரினத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை கண்டிராத இந்த உயிரினம் குறித்த தகவல்களை அறிய ஆய்வாளர்கள் விரைந்துள்ளனர். இதுவரை இந்த பூமியில் 8.7 மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ உயிரினங்கள் இன்னும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இது மற்றொரு உயிரினம் தான் ஏலியன் என்று கருதி அஞ்ச வேண்டாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.