டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கி சூடு 26 பேர் பலி - குழந்தைகளுக்காக தன் உயிரை விட்ட தாய்
விக்னேஷ் (Author) Published Date : Nov 08, 2017 11:56 ISTWorld News
டெக்சாஸ் மாகாணத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் காரை மாகாணத்தின் அருகில் நிறுத்திவிட்டு சரமாரியாக சுட்டதில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து போலீசார் விசாரித்ததில் டெவின் பேட்ரிக் கெல்லி என்பவர் துப்பாக்கி சூடு நடத்தியது தெரியவந்தது. இவருக்கு வயது 26, 2014-இல் விமான படையில் பணிபுரிந்தவர். இவர் எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது தெரியவில்லை. இதில் 26 பேர் பலியாகினர் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடித்திவிட்டு தப்பிக்க சென்றபோது ஒருவர் மடக்கிப்பிடிக்க முயன்றுள்ளார். அவன் காரில் ஏறி தப்பித்து சென்று விட்டதாக கூறப்பட்டது. ஆனால் சிறிது தூரத்தில் கெல்லி தற்கொலை செய்து கொண்டு காரில் பிணமாக கிடந்தார்.
இந்த துயர சம்பவத்தில் போது தன்னுடைய நான்கு குழந்தைகளை கட்டியணைத்து தன் உடலில் குண்டை வாங்கி கொண்டு எங்களை காப்பாற்றியதாக அந்த தாயின் குழந்தைகளே கூறியுள்ளனர். இருந்த போதும் ஒரு குழந்தைக்கு குண்டு பாய்ந்ததில் சிறுவன் காயமடைந்தான் அந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர் தற்போது உடல் முன்னேற்றம் அடைந்து வருகின்றான். இது போன்ற சம்பவம் டெக்சாஸ் வரலாற்றிலே நடந்தது கிடையாது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளனர்.