Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சிங்கப்பூரில் உலகின் கடைசி வெப்பமண்டல பனிக்கரடிக்கு கருணை கொலை

உலகின் கடைசி வெப்பமண்டல பனிக்கரடி இணுகாவை கருணை கொலை செய்த புகைப்படம் வெளிவந்துள்ளது.

உலகில் மொத்தமாக 7.7 மில்லியன் விலங்கினங்கள் இருந்தது. ஆனால் தற்போது உலக வெப்பமயமாதல், பருவ கால மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகள் போன்ற பல காரணங்கள் விலங்கினங்கள் படிப்படியாக அழிந்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது வெப்பமண்டல கரடிகள் இனம் அளித்துள்ளது. சிங்கப்பூரில் உலகின் கடைசி வெப்பமண்டல பணிகரடியை அதன் சரணாலயத்தில் பராமரித்து வந்தனர்.

'இணுகா' என்று பெயர் சூட்டப்பட்ட இந்த கரடி உலகின் கடைசி பனிக்கரடி என்பதால் சிங்கப்பூர் மக்கள் அனைவரும் இதனை அன்போடு பார்த்து கொண்டனர். இணுகா டிசம்பர் 26, 1990இல் பிறந்தது. பொதுவாக பணிகரடிகள் 15 லிருந்து 18 வருடங்கள் உயிர் வாழும். ஆனால் இணுகா கடந்த ஆண்டுடன் தன்னுடைய 27வது பிறந்தநாளை கொண்டாடியது. இணுகாவின் பெற்றோர்கள் நானூக் (Nanook) மற்றும் ஷேபா (Sheba) என்ற பனிக்கரடிகள் சிங்கப்பூருக்கு 1978-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் பிறகு இவர்களின் குழந்தையாக இணுகா உயிரியல் பூங்காவில் சிறப்பாக பராமரித்து வந்தனர்.

27 வயதை கடந்த இணுகாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நோயின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. இணுகா விரைவில் குணமடைய சிங்கப்பூர் மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வந்தனர். அவர்களின் பிரார்த்தனையை இணுகாவை ஐந்து ஆண்டுகள் உயிர் வாழ காரணமாக இருந்தது எனலாம். ஆனால் தீவிர நோயின் தாக்கத்தால் இணுகாவின் விளையாட்டு தனம் குறைந்து ஒரே இடத்தில் முடங்கியது. மருத்துவர்கள் இணுகாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை.

இதனால் இணுகாவின் உடலில் பச்சை நிற பூஞ்சை போன்ற தாக்கம் வெகுவாக உடல் முழுவதும் பரவியது. நோயால் கடும் அவதிப்பட்டு வந்த இணுகாவை கருணை கொலை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு நேற்று இணுகா கருணை கொலை செய்யப்பட்டதாக உயிரியல் பூங்காவின் தெரிவித்தனர். இணுகாவின் இழப்பிற்கு சிங்கப்பூர் மக்கள் அனைவரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். 

சிங்கப்பூரில் உலகின் கடைசி வெப்பமண்டல பனிக்கரடிக்கு கருணை கொலை