Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சிட்டு குருவி இனமே இல்லாத நிலையில் இன்று உலக சிட்டு குருவிகள் தினம்

இன்று உலகம் முழுவதும் சிட்டுகுருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். சிட்டுக்குருவிகளே இல்லாத நிலையில் வெறும் தினத்தை மட்டும் கொண்டாடி எந்த பயனும் இல்லை. தற்போது மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் கலியுகத்தில் நான்கில் மூன்று பகுதி மனிதர்கள் சுயநலத்திற்காகவும், தன்னுடைய குடும்பத்திற்காக மட்டுமே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இதன் விளைவுதான் தற்போது பறவைகள் மற்றும் விலங்கினங்கள் அழிப்பு, தொழிற்சாலை முன்னேற்றம், சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் நவீன உலகம். சிட்டு குருவிகளில் புல்வெளி குருவிகள், மலை சிட்டு, காட்டில் வாழும் நரிச்சிட்டு, வெண்கொண்டை கொண்ட குருவி, வெள்ளைக்கோடு கொண்டை உடைய குருவி என பல வகைகள் இருந்தன.

ஆனால் தற்போது ஒரு சிட்டு குருவி காணப்படுவதே அரிதாக உள்ளது. அதன் அழகும், இனிமையான குரலும் கேட்டாலே துன்பம், துக்கத்தை மறந்து மெய் மறந்து போய் விடுவார்கள். தற்போது மனிதர் காதில் ஒலிப்பதெல்லாம் கரகரவென வண்டிகள் சத்தமும், சினிமா பாடல்களும் தான். இன்றைய உலகில் மனிதர்கள் கைகளில் கிராமங்கள் முதல் நகரங்கள் மொபைல் போன்கள் இல்லாமல் இருப்பதில்லை.

மனிதனின் சுய தேவைக்காக மொபைல் போனை அறிமுகப்படுத்தினார்கள். இது தான் சிட்டுக்குருவி இனம் அழிய முக்கிய காரணமாக அமைந்தது. தனிமனிதனின் தேவைக்கு மொபைல் போன் இன்றியமையாததாக மாறியதால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை செல்போன் டவர்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளது. இந்த செல்போன் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு சிட்டுகுருவியை பாதித்து இனப்பெருக்கம் செய்ய முடியாமல் சிட்டு குருவி இனம் படிப்படியாக குறைந்துள்ளது.

காடுகள், விவசாயம் அழிக்கப்பட்டதாலும், அதிகரித்து வரும் நவீன மயமாதலாலும், சுற்றுசூழல் கேடுகளாலும் ஏராளமான பறவைகள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடம் அழிக்கப்பட்டு வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றன. தற்போது ஏராளமான செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஊருக்குள் புகுந்து விலங்கினங்கள் அட்டகாசம், சிறுத்தை மற்றும் யானைகளால் பல உயிர் பலி போன்ற செய்திகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பறவை மற்றும் விலங்கினங்களின் வீடுகளை மனிதன் பறித்து கொண்டான், இதனால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் விலங்கினங்கள் என்ன செய்யும்?..இது மட்டுமல்லாமல் சிட்டுக்குருவியின் அழிவிற்கு கணக்கின்றி கொட்டும் பூச்சி கொல்லி மருந்துகளும் காரணமாக அமைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவு தானியங்களை விரும்பி உண்ணும் சிட்டு குருவிகள், நாம் உபயோகப்டுத்தும் பூச்சு கொல்லி மருந்துகளால் அதனை உண்டு இறக்க நேர்கிறது. நமது நவீன பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு கண்டுபிடிப்புகளும் மனிதரின் சுயநல தேவைக்கு மட்டுமே ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் பறவைகள் மற்றும் விலங்கினங்கள் உயிரினங்கள் பற்றி ஒருத்தனும் கண்டு கொள்வதில்லை.

இந்த உலகில் ஒவ்வொரு உயிரினங்களையும் பாதுகாப்பது மனிதரின் கடமைகளுள் ஒன்று. இன்று உலகம் முழுவதும் சிட்டு குருவி தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று முதலாவது சிட்டுக்குருவியின் சிறப்பை அறிந்து ஒவ்வொரு வீட்டிலும் சிட்டுக்குருவி வாழ தயவு செய்து வழிவகை செய்யுங்கள்.

சிட்டு குருவி இனமே இல்லாத நிலையில் இன்று உலக சிட்டு குருவிகள் தினம்