ஜாங்க்டரி புயலால் ஸ்தம்பித்து போன ஜப்பான்
விக்னேஷ் (Author) Published Date : Jul 30, 2018 11:48 ISTWorld News
இயற்கை சீற்றங்களான நில நடுக்கம், சுனாமி, எரிமலை போன்றவற்றால் ஆண்டிற்கு பல முறைகளால் தாக்கப்படும் ஜப்பான் நாட்டில் நேற்று 'ஜாங்க்டரி' புயல் தாக்கியுள்ளது. மணிக்கு சுமார் 126கிமீ வேகத்தில் சூறாவளியுடன் தாக்கிய இந்த புயலால் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இது தவிர ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜப்பான் நாடே இருளில் மூழ்கியபடி காட்சியளிக்கிறது. நேற்று ஜப்பான் நாட்டை உலுக்கிய இந்த ஜங்க்டரி புயலால் ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது வரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை ஆனால் இந்த புயலால் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏற்கனவே கடுமையான வெயிலால் 80 பேர் வரை உயிரிழப்பு ஏற்பட்டு தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புயலால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் மீட்பு பணியினர் பொது மக்களை பாதிப்புக்குள்ளான இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு காணாமல் போன மக்களை கண்டுபிடிக்க மீட்பு பணியினர் போராடி வருகின்றனர்.
ஜப்பானின் ஷோபார நகரில் மட்டும் 36 ஆயிரம் மக்களை வெளியேற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது குரே, ஷோபார நகர்ப்புற மக்களை மீட்பு குழுவினர் வெளியேற்றியுள்ளனர். இதனை அடுத்து மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அளித்து உதவி வருகின்றனர். தற்போது பலத்த மழை பெய்து வருவதால் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.