ஹேக்கர்கள் கைவரிசை - உபர் வாடிக்கையாளர்கள் தகவல்கள் திருட்டு
ராசு (Author) Published Date : Nov 24, 2017 19:32 ISTWorld News
உபர் கால்டேக்சி நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்தது. இதன் கால்டேக்சி சேவை உலகம் முழுவதும் தற்போது இயங்கி வருகிறது. தற்போது உலகம் முழுவதும் உள்ள 5.7 கோடி வாடிக்கையாளர்கள் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திருட்டு சம்பவம் கடந்த ஆண்டு அக்டொபர் மாதம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இது குறித்து தகவல் தெரிவிக்காமல் மூடி மறைத்த உபர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜோ சல்லிவன் மற்றும் அவரது உதவியாளர்கள் மூடி மறைத்தது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து இவர்களை உபர் நிறுவனம் பனி இடைநீக்கம் செய்துள்ளது. இதனால் திருடப்பட்ட தகவல்களை டெலீட் (Delete) செய்ய பேரம் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்து உபர் நிறுவன அதிகாரி செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் "உபர் நிறுவன வாடிக்கையாளர்கள் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான். இதனால் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை. மேலும் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் போன்ற தகவல்கள் திருட படாததால் வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை." என்று தெரிவித்துள்ளார்.