அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
கோகுல் சரவணன் (Author) Published Date : Apr 10, 2018 10:32 ISTWorld News
மேற்கு ரஷ்யாவின் உல்யனாவ்ஸ்க் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு வந்த 28 வயதான எக்டேரினா பெடியேவா உயிருடன் பதப்படுத்தப்பட்டிருக்கும் செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் மார்ச் 15-ம் தேதி எக்டேரினா தனது கர்பப்பையிலுள்ள நீர்கட்டிகளை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனையை நாடியுள்ளார். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு இறுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சிகிச்சை அறைக்கு கொண்டு சென்றார்கள் அப்போது அவரை மயக்க நிலைக்கு கொண்டு செல்வதற்காக கொடுக்கப்படும் சலைநிற்கு பதில் தவறுதலாக பார்மலின் அழிக்கப்பட்டுவிட்டது.
உடனே தன் தவறை அறிந்த மருத்துவர்கள் பார்மலினை வெளியேற்ற முயற்சித்திருக்கிறார்கள் அனால் அதற்குள்ளாக மருத்துவர்கள் அளித்த பார்மலின் அப்பெண்ணின் உடல் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டது.
உடனே அப்பெண்ணை மாஸ்கோவில் உள்ள வேறு பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். அங்கு அவருக்கு மாற்று மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிதளவு உடல் நலம் தெரிய அப்பெண்ணை கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர். அனால் அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி அவர் உடல் முழுவதும் உள்ள உறுப்புகள் யாவும் அப்படியே உறைந்து போய் இறந்துள்ளார்.
பார்மலின் என்பது பார்மாலிடீஹைடு எனப்படும் வேதிப்பொருளை உள்ளடக்கியது. இது இறந்த உடல்கள் பதப்படுத்த ஆய்வுக்கூடங்கள் மற்றும் பிணவறைகளிலும் பயன்படுத்தப்படும். பார்மலின் கொண்டு பதப்படுத்துவதால் பல நாட்களுக்கு இறந்த உடல்கள் கெட்டுபோகாமல் உறைந்த நிலையிலேயே இருக்கும். இப்போது அப்பெண்ணுக்கு உயிருடன் இருக்கும்போதே பார்மலின் கொடுத்ததால் அவர் உயிரோடு இருக்கும்போதேய அவரது உறுப்புகள் உறைந்து இறந்துள்ளார்.
இதை மருத்துவ ரீதியாக சொன்னால் அப்பெண் உயிரோடு எம்பாளமிங் செய்யப்பட்டிருக்கிறார். அதாவது உயிரோடு பிணமாக்கப்பட்டிருக்கிறார் அப்பெண்மணி.
இச்சம்பவத்தை பற்றி அந்நாட்டு சுகாதார அமைச்சர் கூறுகையில். நடந்த தவறுக்கு காரணம் மருத்துவமனை ஊழியர்கள் மருந்து குப்பியில் மேல் இருந்த அதன் பெயரை படிக்காமல் உபயோகித்ததே ஆகும். இதற்காக அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.