உலகில் முதன்முதலாக டாக்டர் பட்டம் வாங்கிய ரோபோட்
வேலுசாமி (Author) Published Date : Nov 09, 2017 15:11 ISTWorld News
சீனாவில் நடந்த மருத்துவர் தகுதி தேர்வில் ரோபோட் ஒன்று அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளது. தேர்ச்சி மதிப்பெண் 360 இருந்தநிலையில் இந்த ரோபோட் 456 மதிப்பெண்களை எடுத்துள்ளது. இதுவரை மனிதர்கள் எடுத்த மதிப்பெண்களை விட அதிகமாக எடுத்து சாதனை படைத்துள்ளது. இந்த ரோபோட்டை சீனாவில் இப்ளைடெக் மற்றும் சிங்குவா பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ளது. இதை அடுத்து நேர்முக தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டது. இதில் இன்டர்நெட் உபயோக படுத்த தடைவிதித்துள்ளது. இந்நிலையில் சாதாரண மனிதர்களுக்கு நடக்கும் தேர்வை இந்த ரோபோவும் மேற்கொண்டது. இதில் மிக எளிதாக தேர்ச்சி பெற்றுள்ளது.
இதனை அடுத்து இந்த ரோபோட் தற்போது மருத்துவ பணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது சில காலங்கள் வரை உதவி மருத்துவராக பணிபுரியும் என்றும் அதன் பின் மருத்துவ பணிக்கு அனுமதிக்கப்படும் என்று அந்நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரோபோட் தற்போதுவரை 5,30,000 மருத்துவ பணிகளை செய்துள்ளது என்றும் அதன்பின் பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.