அமெரிக்க மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல மல்யுத்த வீரர் கெயின்
வேலுசாமி (Author) Published Date : May 04, 2018 12:08 ISTWorld News
உலகம் முழுவதும் பெரும்பாலான ரசிகர்களை கொண்டுள்ளது WWE (World Wrestling Entertainment). மல்யுத்தத்தை சார்ந்த விளையாட்டு போட்டி மக்கள் மத்தியில் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் விளங்குகிறது. இதற்கு பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளிடம் பலத்த வரவேற்புகள் இருந்து வருகின்றன. இந்த மல்யுத்த போட்டியின் சிறந்த வீரர்களில் ஒருவராக கெயின் (Kane) விளங்குகிறார்.
இவருடைய முழுப்பெயர் தாமஸ் ஜகோப்ஸ் (Glenn Thomas Jacob). சண்டைக்கு வரும்போது இவருடைய அசத்தலான என்ட்ரியும், இவருடைய ஸ்மெக்கும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். இவருடைய அண்ணனான அண்டர் டெக்கர் (Undertaker), இவரும் சிறந்த மல்யுத்த வீரராவார். இருவரின் என்ட்ரியுமே அசத்தலாக இருக்கும். இதில் கெயின், மல்யுத்தத்தில் 1992முதல் தற்போது வரை 26 வருடங்களாக சண்டை போட்டு வருகிறார்.
இவர் இதுவரை மூன்று முறை 'WWF Championship', 'World Heavyweight Championship' பெல்ட்டையும், பனிரெண்டு முறை 'WWE Tag Team Championships' மற்றும் இரண்டு முறை 'Intercontinental Champion' என்ற பெல்ட்டையும் வென்றுள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர் சமீபத்தில் அமெரிக்கா, டென்னிசி மாகாணத்தில் நாக்ஸ் கவுண்டி நகரத்தில் நடைபெற்ற மேயர் பதவிக்கு போட்டியிட்டார்.
இவருக்கு பெரும்பாலான ரசிகர்களின் ஆதரவு இருந்தது. இதனால் கடந்த மே 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த தேர்தல் முடிவில் 17வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாக்ஸ் கவுண்டி நகரத்தின் மேயராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். இதற்கு அவர் எனக்கு வாக்களித்த ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் எனது அணியினருக்கும் நன்றி என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.