தீர்ந்தது ஏர்செல் பிரச்சனை வாடிக்கையாளர்கள் போனை ஸ்விட்ச் ஆப் செய்து ஆன் செய்ய அறிவுறுத்தல்
வேலுசாமி (Author) Published Date : Mar 15, 2018 15:55 ISTBusiness News
கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ஏர்செல் சேவை பாதிப்புக்குள்ளானது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள முடியாமல் கடும் அவதிபட்டு வந்தனர். ஏர்செல் சேவை முற்றிலும் முடங்கியதாக பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆனால் சிறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
அதனை விரைவில் சரி செய்துவிடுவோம் என ஏர்செல் தங்களது வாடிக்கையாளரை சமாதானப்படுத்தி வந்தது. கடும் சிரமத்திற்குள்ளான வாடிக்கையாளர்கள் இதர சேவைகளான ஏர்டெல், ஐடியா, பிஎஸ்என்எள் போன்ற நிறுவனங்களுக்கு மாற ஆரம்பித்தனர். ஆனாலும் இதர நெட்ஒர்க்குக்கு மாற போர்ட் நம்பர் தேவைப்பட்ட நிலையில் போர்ட் நம்பரும் கிடைக்காமல் வாடிக்கையாளர் அவதிப்பட்டனர்.
ஏர்செல் சேவை முடங்கியதால் தமிழகம் முழுவதும் 90சதவீத வாடிக்கையாளர்கள் இதர நெட்வொர்க்குக்கு மாற போர்ட் எண்ணை பெற முயற்சித்தால் ஏர்சல் சர்வரே முடங்கியது. இதனால் பல்வேறு ஏர்செல் அலுவலகம் முன்பு கடும் வாக்குவாதங்களும் போராட்டமும் நிலவி வந்தது. தற்போது சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏர்செல் அலுவலகம் முன்பு ஏராளமான மக்கள் போர்ட் எண்ணை அளிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில் தற்போது ஏர்செல் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்துவிட்டதாக ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய சிஇஓ வாடிக்கையாளர்கள் தங்களது மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து ஸ்விட்ச் ஆன் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது பொது மக்கள் அனைவரும் தங்களது மின்சார சேவை முதல் வங்கி கணக்கு, ஆதார் வரை அனைத்திற்கும் ஒரே மொபைல் நம்பரை கொடுத்து பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஏர்செல் சேவை முடங்கியது பொது மக்களுக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. தற்போது ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறை சரி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொது மக்கள் தங்களது போனை ரீஸ்டார்ட் செய்ய அறிவுறுத்த படுகிறார்கள்.