பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஏர்டெல் நிறுவனம் மீது ரிலையன்ஸ் ஜியோ புகார்
வேலுசாமி (Author) Published Date : May 14, 2018 15:50 ISTBusiness News
டெலிகாம் நிறுவனங்களின் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் போட்டிகள் தொடர்ந்து வலுத்து கொண்டே செல்கிறது. ஜியோவின் வருகையால் பாதிப்படைந்த பல டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனமும் ஒன்று. ஆனால் ஏர்டெல், தங்களது வாடிக்கையாளர்களை கைவிடாமல் இருக்க அதிரடியான சலுகை திட்டத்தை கையில் எடுத்து வழங்கி வருகிறது. சமீபத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 செல்லுலர் வாட்ச்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் விற்பனை செய்துவரும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3இல் லைசன்ஸ் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம், ஏர்டெல் மீது டெலிகாம் டிபார்ட்மெண்ட்டில் (DoT) கடந்த மே 11ஆம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்த புகாரில் ஏர்டெல் நிறுவனம் இந்தியாவிற்குள் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 இன் - இ-சிம் ப்ரொவிஷனிங் நோட் (eSIM provisioning node) என்பதனை செட்டப் செய்யப்படவில்லை. விதிமுறைகளை மீறி இந்தியாவிற்குள் வெளியே ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3இன் சர்விஸ் இயங்கி வருகிறது.
முக்கியமான பாதுகாப்பு விதிமுறைகளையும் சேர்ந்த ஏர்டெல் நிறுவனம், லைசன்ஸ் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை களங்கப்படுத்தும் விதமாக நாட்டிற்கு வெளியே தவறான வலைதள பிணைப்பு (Install Critical Network Element) ஒன்றை நிறுவி வருகிறது. இந்த விவகாரத்தில் ஏர்டெல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஜியோ புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு "ஏர்டெல் நிறுவனம் தற்போதுவரை பொறுப்புடனும் சட்டத்தை மதிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.
எங்கள் மீது ஜியோ தெரிவித்திருக்கும் குற்றம் மற்றுமொரு அற்பமான நம்பிக்கையற்ற குற்றம். ஏர்டெல், டெலிகாம் பிரிவிற்கு ஆப்பிள் வாட்ச் குறித்த அம்சங்கள், வடிவமைப்புகள், சட்டரீதியான செயல்கள் மற்றும் செல்லுலார் கண்டிஷன் போன்றவற்றை முறைப்படி தெரிவித்துள்ளது. அப்படி இருக்கையில் ஜியோ நிறுவனம் மட்டுமே இந்தியாவை ஆள வேண்டும் என்ற நோக்கில் எங்கள் மீது அப்பட்டமான குற்றத்தை சாட்டியுள்ளது.
இது தவிர நெட்ஒர்க் பிணைப்பு மற்றும் வாடிக்கையாளர் தகவல் போன்றவற்றை மிகவும் பாதுகாப்பு வசதியுடன் சட்டபூர்வமாக உருவாகியுள்ளது. இது குறித்து டெலிகாம் பிரிவு கேட்கும் எந்த கேள்விக்கும் பதிலளிக்க தயாராக உள்ளோம்" என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களின் புகார்கள் பல முறை எழுந்த வண்ணம் உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களின் ஆப்பிள் வாட்ச் மாடல்களின் ப்ரீ புக்கிங் கடந்த மே 4ஆம் தேதி முதல் கடந்த மே 11ஆம் தேதி வரை நடந்தது.
இதில் ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 செல்லுலர் மாடலை வாங்கும் பயனாளர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி இஎம்ஐ பரிவர்த்தனை மூலம் 5000 ரூபாய் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்தது. ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் இந்த செல்லுலர் அம்சத்தை உபயோகப்படுத்த வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லின் மைபிளேன் போஸ்ட்பெய்டு (MyPlan Postpaid or Infinity Postpaid) திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். ஆனால் ஜியோவின் போஸ்ட்பெய்டு ப்ரீபெய்டு இருத்தரப்பு வாடிக்கையாளர்கள் இந்த புதிய அம்சத்தை உபயோகப்படுத்தலாம்.
தொடர்ந்து இரு நிறுவனங்களுக்கிடையே ஆன மோதல் வலுத்து கொண்டே செல்கிறது. இரண்டு நிறுவனங்களும் சமீபத்தில் வாடிக்கையாளர்கள் ஐபிஎல் 2018ஐ காண (MIMO (Multiple-Input Multiple-Output) pre-5G technologies) 5ஜி அதிவேக இன்டர்நெட் பயன்பாடை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை பல்வேறு இடங்களில் நடைபெறும் ஐபிஎல் இடங்களான ஜெய்ப்பூர், பெங்களூர், மொஹாலி, இந்தோர், கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற இடங்களிலும் நடைமுறை படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை மும்பை வாங்கீட்டே மைதானத்திலும் (Wankhede stadium, Mumbai), டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திலும் (Feroz Shah Kotla stadium) அமல்படுத்தியுள்ளது.