தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் மாதத்திற்கு மில்லியன் கணக்கில் பணம் வாங்கும் கூகுள்
வேலுசாமி (Author) Published Date : May 16, 2018 12:26 ISTBusiness News
உலகம் முழுவதும் 2.2 பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள கூகுள் நிறுவனம் தனது செயலிகள் மற்றும் இன்டர்நெட் சேவைகள் மூலம் தனது பயனாளர்களை திருப்தி படுத்தும் விதமாக தனது செயலிகளில் புது புது அம்சங்களை அவர்களுக்கு ஏற்றவாறு வழங்கி வருகிறது. கூகுள் தனது பயனாளர்களின் தகவல்களை ரகசியமாக கண்காணித்து திருடி வருவதாகவும் பல குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆண்டிராய்டு போன் மூலம் பயனாளர்களின் ரகசிய தகவல்களை கண்காணித்து மாதத்திற்கு ஜிபி அளவு தகவல்களை சேகரித்து வருகிறது.
இந்த தகவல்கள் பயனாளர்களின் இடத்தை துல்லியமாக காட்ட உபயோகப்படுத்துவதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஆனால் இருக்கும் இடத்தை காட்ட Location Service Offஇல் இருந்தாலும், சிம் கார்ட் இல்லாமல் போனாலும், எந்த கூகுள் செயலிகளும் மொபைலில் இல்லாமல் போனாலும் தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருக்கிறது. இது தற்போது பிரச்சனையாக மாறியுள்ளது. Location Service Offஇல் இருக்கும் போது ஒரு மொபைலில் உள்ள IP முகவரியை வைத்து, அந்த IP எந்த இணைப்பில் (Connection Point) உள்ளது, எந்த மொபைல் டவரில் இணைந்துள்ளது என்பதனை வைத்து இருக்கும் இடத்தை Location Service Offஇல் உள்ள போதும் காட்டுகிறது.
மாதத்திற்கு ஜிபி அளவில் சேகரிக்கும் இந்த தகவல்களை வைத்து பயனாளர் இடத்தை அறிய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் மில்லியன் கணக்கில் பணம் வாங்குகிறது. இது போன்ற கண்காணிப்பு செயலை முதலில் தெரு கண்காணிப்பு (Street View surveying) ஒரு பகுதியாக ஆரம்பித்தது. ஆனால் தற்போது நொடிக்கு நொடி முழு தகவலையும் சேகரித்து சம்பாதித்து வருகிறது. இது தவிர ஆண்டிராய்டு மொபைலில் உள்ள பாரோமெட்ரிக் டிவைஸ் (Barometric devices) மூலமும் பயனாளர் எந்த இடத்தில், எந்த கட்டிடத்தில் உள்ளார் என்பதையும் கண்காணிக்கிறது.
பாரோமெட்ரிக் டிவைஸ் (Barometric devices) மூலம் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் காற்றழுத்தத்தை வைத்து இருக்கும் இடத்தை அறியலாம். இப்படி நமக்கே தெரியாமல் நாம் என்ன செய்கிறோம், எங்கு இருக்கிறோம் போன்ற பல தகவல்களை சேகரித்து அதனை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போன்ற பல வகையான நிறுவனங்களுக்கு விற்று மாதத்திற்கு மில்லியன் கணக்கில் பணத்தை சம்பாதித்து வருகிறது. இது குறித்த தகவலை சமீபத்தில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் தெரிவித்துள்ளது.