Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இனி ஜிமெயிலில் AI தொழில்நுட்பத்தின் மூலம் வேகமாக எழுதலாம்

மின்னஞ்சலை சீக்கிரமாக அனுப்ப உதவும் ஜிமெயிலின் புதிய அம்சங்கள்

மின்னஞ்சல் செயலிகளில் பிரபலமானதாகத் திகழும் ஜிமெயிலில் பல அற்புதமான அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. ஜிமெயிலில் ஏற்கனவே ஸ்மார்ட் ரிப்ளை (Smart Reply) என்கிற அம்சம் சென்ற வருடத்திலிருந்து உபயோகத்தில் இருந்து வருகிறது. இது, அலுவலகத்தில் பணி செய்யும் நபர்களால்  மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக, "நன்றி", "நான் அதை செய்து முடிக்கிறேன்", "எனக்கு விருப்பம் இல்லை" , போன்ற வாக்கியங்கள் நாம் பதிலளிக்க ஏற்றவாறு கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.  inboxஇல் வரும் மின்னஞ்சல்களுக்கு ஏற்றாற்போல எளிதாக  பதிலளிக்கும் வண்ணம் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும்.

இந்நிலையில் , கூகிளின் வருடாந்தர மாநாடு கலிஃபோர்னியாவில் இந்த வாரம் நடைபெற்றது. இதில், ஏராளமான புதிய தொழிநுட்ப அம்சங்களை கூகிள் தன்னுடை சொந்தத் தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் முக்கிய அம்சமாக ஜிமெயிலில் பணம் செலுத்தும் புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மற்றொரு முக்கிய வெளியீடாக, செயற்கை நுண்ணறிவு மூலம் ஜிமெயிலில் இனி சீக்கிரமாக எழுத முடியும். இதற்கு "ஸ்மார்ட் கம்போஸ்"(Smart Compose)  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

எடுத்துக்காட்டாக, நாம் ஜிமெயில் முகவரியை  டயப் செய்ய ஆரம்பிக்கும்போதே, முழு முகவரியும் வருவது போல, நாம் ஏற்கனவே அடித்து வைத்திருந்த வாக்கியங்களை மீண்டும் எழுதும்போது, பின்னணியில் காட்சியளிக்கும். இந்தப் பரிந்துரையை நாம் ஏற்கவேண்டுமெனில், டேப் (Tab) பட்டனை கிளிக் செய்தால் போதுமானது. இதன் மூலம், மின்னஞ்சல் அனுப்பும் நேரத்தைக் குறைக்க முடியும். மேலும், இலக்கணப் பிழைகள் ஏற்படாமல் இருக்கும் வாய்ப்பும் அதிகம்.

இந்த புதிய முறையை பரீட்சித்துப் பார்க்க, Settings மெனுவில் இல் நுழைந்து "Try the new Gmail" என்ற அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும். இந்த அம்சங்களை முழுவதுமாகப் பயன்படுத்த, ஜிமெயில் பயனர்கள் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும்.

இனி ஜிமெயிலில் AI தொழில்நுட்பத்தின் மூலம் வேகமாக எழுதலாம்