Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மின்னஞ்சல் செயலியான ஜிமெயிலில் இனி பண பரிவர்த்தனையும் செய்யலாம்

கூகுள் மின்னஞ்சல் செயலியான ஜிமெயிலில் மின்னஞ்சல் மட்டுமல்ல பணத்தையும் அனுப்பலாம்.

கூகுளின் பிரபலமான செயலிகளும் முக்கியமானது ஜிமெயில். இணையதள வழியில் மின்னஞ்சல் அனுப்பும் வசதி கொண்டுள்ள இந்த ஜிமெயிலை உலகம் முழுவதும் 1.8 பில்லியன் மக்கள் உபயோகித்து வருகின்றனர். தங்களது வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் புதிய அம்சங்களை கொண்ட அப்டேட்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஆண்டிராய்டில் இயங்கி வரும் ஜிமெயிலில் வேகமாக மின்னஞ்சல் அனுப்பும் வசதி (Faster Gmail), அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்கள் (Better security), தேவையற்ற மின்னஞ்சலை நீக்குதல் (Email Blocking)மற்றும் புதிய வடிவமைப்புடன் மின்னஞ்சல் அனுப்புதல் (New Formatting Options) போன்ற அம்சங்களை வழங்கியது.

இதன் பிறகு தற்போது ஜிமெயிலில் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. தற்போது உலகம் ஒவ்வொரு நாளும் டிஜிட்டல் உலகமாக மாறி கொண்டு வருகிறது. இன்டர்நெட்டும், ஆன்லைன் உபயோகமும் தற்போதைய மக்களிடம் அதிகம் புழக்கத்தில் உள்ள நிலையில் ஆன்லைனில் இயங்கும் பண பரிவர்த்தனை போன்ற சேவைகள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் இருக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு வங்கிகளுக்கு செல்லாமல் பண பரிவர்த்தனை செய்ய முடியும்.

அந்த வகையில் ஆன்லைனில் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஏராளமான செயலிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 1.8 பில்லியன் வாடிக்கையாளர்கள் உபயோகித்து வரும் ஜிமெயிலிலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜிமெயில் மூலம் பணம் அனுப்புவோர் 9999 டாலர் (இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 6,72,432) வரை ஒரே சமயத்தில் அனுப்பலாம். இந்த பயன்பாடு இணையதளம், ஆண்டராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜிமெயில் மூலம் பணம் அனுப்பும் முறையை தெரிந்து கொள்ள கூகுள் வழிமுறைகளை வழங்கியுள்ளது.

இதனை அறிய கிளிக் செய்யவும். https://support.google.com/mail/answer/3141103?co=GENIE.Platform=Desktop&hl=en&oco=1

மின்னஞ்சல் செயலியான ஜிமெயிலில் இனி பண பரிவர்த்தனையும் செய்யலாம்