இந்தியன் ரயில்வே பாதுகாப்பு துறையில் எஸ்எஸ்எல்சி மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
வேலுசாமி (Author) Published Date : May 21, 2018 16:35 ISTEducation News
தற்போதுள்ள சூழலில் படித்து முடித்து விட்ட பட்டதாரி இளைஞர்கள் முதல் SSLC இளைஞர்கள் வரை பெரும்பாலும் அரசு தேர்வுகளையே நம்பியுள்ளனர். இதனால் அரசு அறிவிக்கும் தேர்வுகளில் லட்சம் முதல் கோடிக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகின்றனர். சமீபத்தில் RRB அறிவித்த தேர்வுக்கு 2 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டது வரலாற்றிலே இதுவே முதன் முறையாகும். இதனால் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கமும் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி வருகின்றனர்.
தற்போது ரயில்வே பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான ரயில்வேயின் பாதுகாப்பு துறையில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தேர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி பட்டதாரி இளைஞர்கள் சப் இன்ஸ்பெக்டர் பிரிவில் 1120 காலி பணியிடங்களுக்கும், SSLC முடித்தோர் கான்ஸ்டபிள் பிரிவில் 8619 காலி பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்போர் வயது வரம்பு 20-25 ஆகவும், கான்ஸ்டபிள் பணிக்கு வயது வரம்பு 18-25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு கடந்த 18-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமானவர்கள் 01/06/2018 ஆம் தேதி முதல் ரயில்வேயின் அதிகாரபூர்வ தலத்தில் (http://www.indianrailways.gov.in/) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி 30/06/2018 ஆகும். இந்த வேலைவாய்ப்புக்கு ஆண்கள் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்காக ஆண்களுக்கு General/OBC பிரிவில் 500 ரூபாய் கட்டணமும், SC/ST பிரிவிற்கு 250 ரூபாய் கட்டணமும், அனைத்து பெண்கள் பிரிவிற்கும் 250 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்க பட்டுள்ளது. இந்த பணியிடங்களை எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் ஆண்கள் 165CM உயரமும், பெண்கள் 157CM உயரமும் கொண்டிருக்க வேண்டும். மேலும் இந்த அறிவிப்பு குறித்து முழு விவரங்களை இந்த இணைப்பை க்ளிக் செய்யவும் https://si.rpfonlinereg.org/documents/Notification_No.02-2018_SI-English.pdf