தமிழக மக்களுக்கு முதலமைச்சரின் பொங்கல் பரிசு
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 29, 2017 05:30 ISTஇந்தியா
விரைவில் வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு பொருட்களை அறிவித்துள்ளார். இவர் அறிவித்துள்ள அறிக்கையில் "பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டை உள்ள குடும்பங்கள், காவலர் குடும்ப அட்டை உள்ள காவலர் குடும்பங்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, இரண்டு அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பொங்கல் பரிசு பொங்கல் பண்டிகைக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இந்த பொங்கல் பரிசினால் 1.84 கோடி மக்கள் பயனடைவர், இதனால் தமிழக அரசுக்கு 210 கோடி செலவு ஏற்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மேற்படி பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பொங்கலை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வாழ்த்துகிறேன் " என்று தெரிவித்துள்ளார். மேலும் வேளாண் உற்பத்தியை பெருக்க நெல்லின் கொள்முதல் விலையையும், தமிழ்நாடு முழுவதும் 1564 நெல் கொள்முதல் நிலையங்கள் தீர்ப்பதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.