Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் சங்க துணைதலைவராக பணிகளை தொடருவேன் - பொன்வண்ணன்

ponvannan withdraw resignation

சமீபத்தில் நடிகர் சங்க துணை தலைவர் பதவியை நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்தார். ஆனால் நடிகர் சங்கம் பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை. இது குறித்து நடிகர் பொன்வண்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "அனைத்து வேலைகளையும் நடிகர் சங்கத்தில் பகிர்ந்து கொள்கிறோம். அரசியல் சார்ந்ததாக இல்லாமல் பணியை செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் நடிகர் விஷால் திடீரென்று ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தெரிவித்தது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. 

ஆகையால் அந்த பதவியை ராஜினாமா செய்தேன். நடிகர் விஷால் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுவது அவருடைய தனிப்பட்ட உரிமை என்றாலும் எனக்கு வருத்தத்தை அளித்தது. தற்போது அவர் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடவில்லை. ஆகையால் நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியில் நீடிக்க முடிவு செய்துள்ளேன். நடிகர் சங்க கட்டிட பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அதற்கு முழு ஒத்துழைப்பை தருவேன். அனைவருடனும் தொடர்ந்து செயல்படுவேன். " என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க துணைதலைவராக பணிகளை தொடருவேன் - பொன்வண்ணன்