Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

காவிரி நதிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு ரஜினிகாந்தின் ட்வீட்

rajinikanth tweet about cauvery water dispute verdict

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நீர் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை என்றும் தமிழ்நாட்டிற்கு 177.25 டிஎம்சி நீரை 10 மாத கால இடைவெளியில் ஒதுக்கீடு செய்யவும் உத்தரவிட்டனர்.

இதில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் மக்களிடையே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பதிவு செய்திருக்கிறார். மேலும் நடிகர் கமல்ஹாசன் உள்பட ஏராளமானோர் காவிரி நதிநீர் பிரச்சனையின் தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு ரஜினிகாந்தின் ட்வீட்