இந்தியா சீனா எல்லையில் உள்ள திபெத்தில் கடும் நிலநடுக்கம்
வேலுசாமி (Author) Published Date : Nov 18, 2017 12:30 ISTஇந்தியா
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் அருகே இந்தியா - சீனா எல்லை பகுதியான திபெத் அமைந்துள்ளது. இன்று அதிகாலை 6.30 மணியளவில் நிஞ்சியா பகுதியிலிருந்து 58 கி.மீ தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 10 கி.மீ தொலைவில் இருந்து ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெருக்களில் குடியேறினர். மேலும் பீஜிங் நேரப்படி காலை 8.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. இது பூமிக்கடியில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக சீன அரசு வலைத்தளங்கள் தெரிவிக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.