சென்னை வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி ஏந்தி கடும் எதிர்ப்பு
ராசு (Author) Published Date : Apr 12, 2018 10:36 ISTஇந்தியா
இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாடுப் பேரவையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்களும் சென்னை விமான நிலையம் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ நிலையங்களில் கருப்பு கொடி ஏந்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகுகின்றனர். மோடி சென்னை வரும் நாள் துக்க நாள் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதோடு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே, இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன் இராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்பு, மாமல்லபுரத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று கார் மூலம் திருவிடைந்தை அடைந்து அங்கிருக்கும் ராணுவக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க உள்ளார்,மோடி. இந்தியாவில் உற்பத்தியாகும் ராணுவம் சம்பந்தமான ஆயுதங்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்பதை உணர்த்தவே இந்தக் கண்காட்சி.
மேலும், அடையாறில் உள்ள கேன்சர் நிருவனத்துக்கு சென்று நோய் தடுப்பு மையம், நாள் பராமரிப்பு மையம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே, கூறியிருந்தவாறு, மோடி இன்று உண்ணாவிரதமும் மேற்கொள்வர். இதனால், அவருடைய அலுவலகப் பணிகள் பாதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.