Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விரைவில் இந்தியாவிற்கு பேராபத்து எச்சரிக்கும் நாசா

இந்தியாவில் அதிகரித்து வரும் காட்டு தீ குறித்து நாசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொதுவாக கோடைகாலங்கள் என்றாலே மக்களை வெயில் வாட்டி வதைக்கும். இதனால் விவசாயம், நீர்நிலைகள் என முற்றிலும் வறண்டு போகும். ஆனால் தற்போது புவி வெப்பமயமாதல், காட்டுத்தீ போன்ற பல காரணங்களால் விவசாயம் வழக்கமான சூழலிலும் வரண்டுதான் காணப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் நீரின்றி பயிர்கள் வறண்டு போவதால் விளைநிலங்களை எரித்து விடுகின்றனர். இது தவிர காடுகள் மற்றும் மனிதர்களின் ஒழுங்கீனற்ற செயல்களால் சிறு இடத்தில் ஆரம்பித்த தீயானது வெகுவாக பரவி ராட்சச காட்டு தீயாக மாறி விடுகிறது.

அதுவும் தற்போது கோடைகாலம் என்பதால் வறண்ட இடங்களில் வெகுவாக காட்டு தீயானது பரவி விடும். இந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா இந்தியாவை செயற்கை கோள் மூலம் புகைப்படம் எடுத்துள்ளது. இந்த புகைப்படத்தை கண்டு ஏராளமானோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தில் இந்தியாவில் பல இடங்களில் தீ புள்ளிகளாகவே காணப்படுகிறது. இது பெரும்பாலும் வட மாநிலங்களான மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது.

மேலும் தென் மாநிலங்களிலும் குறைந்த அளவு தீ புள்ளிகள் காணப்படுகிறது. இந்த தீ புள்ளிகள், காட்டு தீ மற்றும் காற்று மாசுபாட்டினால் அதிகப்படியாக காணப்படும் கார்பன் துகள்களை குறிக்கின்றன. குறிப்பாக நிலங்களில் ஏற்படும் தீ விபத்தினால் மட்டும் 14 சதவீதம் அளவுக்கு கார்பன் புகை சூழ்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் இந்தியா முழுவதும் நிகழ்ந்த காட்டு தீ குறித்த பட்டியலையும் நாசா வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை மட்டும் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மொத்தமாக 15,912 காட்டு தீ நிகழ்ந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதில் கடந்த ஏப்ரல் 22இல் மட்டும் 2352 காட்டு தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.இப்படியே போனால் பெரும் இயற்கை பேரிடராக மாறி விடும்.ஏற்கனவே விவசாய நிலங்கள் அழிப்பு, நீர்நிலைகள் அழிப்பு போன்றவற்றினால் முன்னதாக பசுமை வளமாக காணப்பட்ட இந்தியா தற்போது பாலை வனமாக மாறிக்கொண்டு வருகிறது. இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் நாசா ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

முன்னதாக தேனீ மாவட்டத்தில் ஏற்பட்ட குரங்கிணீ காட்டு தீ விபத்திற்கு முன்பு நாசா எச்சரித்தது. ஆனால் இதனை கவனிக்காமல் அலட்சியமாக இருந்ததால் 19 உயிர்களை பலி கொடுக்க நேர்ந்தது. தற்போது நாடு முழுவதும் பரவி வரும் காட்டு தீயினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் இது கோடைகாலம் என்பதால் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைவில் இந்தியாவிற்கு பேராபத்து எச்சரிக்கும் நாசா