அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்த புதிய கிரகம்
ராசு (Author) Published Date : Nov 13, 2017 15:10 ISTWorld News
அமெரிக்காவின் நாசா மையம் சூரியனை சுற்றியுள்ள கிரகங்கள் மற்றும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்களை பற்றி பல ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 'ஸ்பிட்சர்' விண்வெளி டெலஸ்க்கோப் மூலம் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த கிரகம் சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மிக பெரிய கிரகமான வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரியது என்று தெரிவித்துள்ளது.
இந்த கிரகத்தை பற்றிய தகவல்கள் தெரியவில்லை. நாசா ஆராய்ச்சி மையம் இந்த கிரகத்திற்கு 'ஒ.ஜி.எல்.இ- 2016-பி.எல்.ஜி-1190 எல்.பி' என்று பெயர் வைத்துள்ளது. இந்த கிரகத்தை பற்றி தீவிர ஆராய்ச்சியில் நாசா ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுவருகிறது. மேலும் இந்த கிரகத்திற்கு அருகில் பழுப்பு நிறத்தில் ஒரு பொருள் போன்று தென்படுகிறது. இது அந்த பெரிய கிரகத்தின் துணை கோளாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கோளானது பூமியிலிருந்து சுமார் 22 ஆயிரம் ஒளி தூரத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.