ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட ஸ்டண்ட் மாஸ்டரின் மாப்பிள்ளை
வேலுசாமி (Author) Published Date : May 23, 2018 10:22 ISTஇந்தியா
தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்று காவலுக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாரை திணறிடித்தனர். ஆனால் போராட்ட மக்களை கட்டுப்படுத்த அங்கிருந்த போலீசார் மக்கள் மீது தடியடி நடத்தியும், துப்பாக்கி சூடு நடத்தியும் விரட்டினர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் அநியாயமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனால் பலி எண்ணிக்கை படிப்படியாக 10ஆக உயர்ந்துள்ளது. இதனால் தூத்துக்குடியில் ரத்த வெள்ளத்தில் ஏராளமான மக்கள் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த செய்தியறிந்து தமிழகம் முழுவதும் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கும், மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த சொன்ன அதிகாரிகளையும் கண்டித்து கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். எவனோ தனியார் முதலாளியை காப்பாற்ற தன்னுடைய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதா என சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதன் காரணமாக தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை என்ன நடந்தாலும் போராட்டத்தை கைவிட வேண்டாம் என பல தரப்பட்ட மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் போராட்டத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழகம் முழுவதும் மக்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் மாஸ்டரான சில்வா தனது டிவிட்டரில் "எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார் .மிக்க வேதனையோடு பகிர்கிறேன்" என்று உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார்.