Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

முன்னனி நாயகியிடம் பேச்சு வார்த்தை நடத்தும் - காட்டேரி படக்குழு

hansika in katteri movie

'மேயாத மான்' படத்தில் நாயகனாக நடித்த வைபவ்வின் அடுத்த படத்திற்கான தகவல் வெளிவந்துள்ளது. ‘யாமிருக்க பயமே’ என்ற ஹரர் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் டி.கே. இவர் இயக்கவிருக்கும் 'காட்டேரி' என்ற ஹரர் படத்தில் நாயகனாக நடிக்க வைபவ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கான சிறப்பு பூஜை சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னணி நடிகை ஹன்ஷிகாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஹரர் படத்திற்கு முன்னதாகவே சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2 என்ற இரு த்ரில்லர் படத்தில் ஹன்சிகா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.    

தற்பொழுது ஹன்சிகா  'டார்லிங்' படத்தினை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நாயகனாக அதர்வா நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கான சிறப்பு பூஜை சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.     

 

முன்னனி நாயகியிடம் பேச்சு வார்த்தை நடத்தும் - காட்டேரி படக்குழு