Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

28 ஆண்டுகளுக்கு பிறகு சிவா படத்தின் இயக்குனருடன் இணையும் நாகர்ஜுனா

nagarjuna new movie

28 ஆண்டுகளுக்கு முன்பு நாகர்ஜுனா நடிப்பில் தெலுங்கில் வெளியான சிவா படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை  பெற்றார். அந்த படம் தமிழிலும் 'உதயம்' என்ற பெயரில் வெளிவந்து. நாகர்ஜுனா தெலுங்கில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தும், சிவா படத்தின் மூலம் அனைத்து திரையுலகிலும் தனக்கென ஒரு தனி வட்டாரத்தை பிடித்திருந்தார். தெலுங்கு திரையுலக முன்னணி இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த படத்தினை இயக்கியிருந்தார். மேலும் இந்த இரு படங்களுக்கும்  இளையராஜா இசையமைத்திருந்தது குறிப்பிட்ட தக்கது.     

இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு நாகர்ஜுனா மீண்டும் ராம்கோபால் வர்மா உடன் இணையவுள்ளார். 6வது முறையாக இணைந்திருக்கும் பெயரிடப்படாத இந்த புது படத்தில் நாகர்ஜுனா அதிரடி ஆக்சன் போலீஸ் கெட்டப்பில் வரவிருக்கிறாராம். இந்த நிலையில் படத்தின்  முதல் தோற்ற போஸ்டர்களை நாகார்ஜுனா வெளியிட்டுள்ளார்.  

28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சிவா படத்தின் மூலம் என் வாழ்க்கையே மாறியது.  இந்த படத்தில் நடிப்பதை பற்றி என் உணர்வை சொல்ல முடியவில்லை. படம் நன்றாக வருவதற்கு வாழ்த்துக்கள் மட்டும் தான் சொல்ல முடிகிறது என்று நாகர்ஜுனா அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.    

28 ஆண்டுகளுக்கு பிறகு சிவா படத்தின் இயக்குனருடன் இணையும் நாகர்ஜுனா