Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நெஞ்சில் துணிவிருந்தால் ரீ ரிலீஸ் - வைரலாகும் சுசீந்திரன் வீடியோ

director suseenthiran viral video

சுசீந்தரன் இயக்கிய படங்கள் அனைத்துமே விரும்பத்தக்கதாக எதார்த்தமான கதைகளை நல்ல முறையில் சொல்லுவதே அவரின் ஸ்பெஷல், அது போன்று நவம்பர் 10ம் தேதி வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் பல விமர்சனங்கள் படத்தினை வரவேற்பதக்கதாகவும், சில விமர்சனகள் படத்தின் சில குறைகளை சுட்டி காட்டும் விதத்திலும் அமைத்திருந்தது.   

அதிரடி ஆக்க்ஷன் கலந்த இப்படத்தில் சந்தீப் கிஷன், மெஹ்ரீன், விக்ராந்த், சூரி என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நட்பு மற்றும் சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்டதால், காதல் சம்மந்தப்பட்ட காட்சிகள் தேவையில்லை என்று நாயகி மெஹ்ரீன் சம்மந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் விமர்சனத்தின் பெயரில் இயக்குனர் சுசீந்திரன்  நீக்கியிருக்கிறார்.    

அதேபோல பத்திரிக்கையாளர்களின் விமர்சனங்களை பார்க்கும் போது இறுதி கட்டத்தில் படத்தின் முடிவுகள் அடுத்த கட்ட நிகழ்விற்கு போவது போன்று உள்ளது. இதனால் படத்தின் முடிவு முழுமையாக இருப்பது போன்று தெரியவில்லை என்று விமர்சனம் வந்ததின் காரணத்தினால் கிளைமாக்ஸ் காட்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதோடு  இடைவேளை காட்சியிலும் மாற்றங்களை தந்திருப்பதாக இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார். 

நாயகியின் காட்சிகளை நீக்கியதன் காரணத்தினால் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன், சுமார் 20 நிமிடம் படத்தின் காட்சிகள் நீக்கப்பட்டது. 

இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் படத்தினை ரீ ரிலீஸ் செய்வதாகவும், அடுத்த மாதம் 15ம் தேதி வெளியிடுவதாக கூறியதோடு, சில தவிர்க்க முடியாத காரணத்தினால் நாளை முதல் எந்த வித திரையரங்குகளிலும் திரையிடப்படாது என்று கூறினார். மேலும் படத்தினை பார்த்தவர்களுக்கும் படத்தை பார்த்து உண்மையான விமர்சனம் செய்தவர்களுக்கும் உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

நெஞ்சில் துணிவிருந்தால் ரீ ரிலீஸ் - வைரலாகும் சுசீந்திரன் வீடியோ