Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அஜித்துடன் இணையும் நிவின்பாலி

Is Nivin Pauly Joining Viswasam

மலையாளத்தில் வெளிவந்த 'ப்ரேமம்' படத்தின் மூலம் மெகா ஹிட் அடித்த நிவின் பாலி தற்பொழுது தமிழ் திரையுலகில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் வெளிவர உள்ள ரிச்சி படத்தில் ரவுடி கெட்டப்பில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர், ட்ரைலர் போன்றவை முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் அஜித்தின் 58வது படமான 'விஸ்வாசம்' படத்தில் நிவின் இணைவதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தின் மூலம் முதல் முதலாக இணையும் நிவினுக்கு முக்கிய வேடம் இருப்பதாகவும், இது வரை பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதற்கான அதிராகபுர்வமான தகவலையும் படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

அஜித்துடன் இணையும் நிவின்பாலி